நடிகர் சரத்குமார் திடீர் பரபரப்பு.. "வாயில்லையா அவருக்கு, அதான் சொல்லிட்டேனே".. அதிர்ந்து போன மீடியா
சென்னை: பிரபல நடிகரும், சமக தலைவருமான சரத்குமார் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வருகிறது.. சமக தலைவர் சரத்குமார் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.. கட்சியை பலப்படுத்தும் வேலைகளையும் தீவிரப்படுத்தி வருவதாக தெரிகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் சரத்குமார் அளிக்கும் பேட்டிகள் அவ்வப்போது பரபரப்பை கிளப்பிவிட்டுவிடும்.. இப்படித்தான் ஒருமுறை ராமநாதபுரத்துக்கு சரத்குமார் வந்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் பொறுப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சரத்குமார் வந்திருந்தார்.. ஆனால், விழாவிற்கு லேட்டாக வந்துவிட்டார்.. அதனால், பரபரப்பாக காணப்பட்டார். அந்த நேரம் பார்த்து செய்தியாளர்கள் அவரை பேட்டி காண முற்பட்டனர்.
இதனால் ஆவேசம் அடைந்த சரத்குமார், '''ரஜினி பற்றி பேச வேண்டுமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் 5 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்.. நான் கல்யாணத்துக்கு வந்திருக்கிறேன்... பேட்டி தருவதற்கு வரவில்லை.. நானும் பத்திரிகையாளன் தான்... உங்களை யார் வரச்சொன்னது'' என்று ஆவேசப்பட்டார்.. பிறகு உடனே கூலாகி, "சரி, திரும்பி வரும்போது பேட்டி தருகிறேன்"தருவதாக சொல்லி விட்டு சென்றார்.. பிறகு, கல்யாணத்தை முடித்துவிட்டு வந்ததுமே பேட்டி தந்தார் என்றாலும், செய்தியாளர்களிடம் சரத்குமார் சீறியிருந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பரபரப்பு: இந்நிலையில், மறுபடியும் செய்தியாளர்களை அதிர வைத்துள்ளார் சமக தலைவர் சரத்குமார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சூர்யவம்சம் 2 படத்தை பொறுத்தவரை, இன்றைய இளைஞர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால், குடும்பம் படமாக இருப்பதால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆளுநருக்கு டிஸ்மிஸ் செய்வதற்கான அதிகாரம் இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர் நிதானமாக முடிவெடுத்திருக்கலாம்" என்றார்.
நடிகர் விஜய்: இதையடுத்து செய்தியாளர்கள் நடிகர் விஜய் அரசியல் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு சரத்குமார், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கான உரிமை உள்ளது" என்றார்.. பிறகு, செய்தியாளர்கள் மறுபடியும் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர்.. இதனால் கடுப்பான சரத்குமார், செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீங்கள் எந்த நிறுவனம்? நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் நிறுவனத்தின் கருத்து என்ன?" என்று சம்பந்தப்பட்ட செய்தியாளரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

"விஜய் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். நீங்கள் ஏன் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள்? முதலில் விஜய் அரசியல் களத்திற்கு வரவேண்டும்.. அதை வரவேற்கிறோம் என்று ஏற்கனவே பேசிவிட்டோமே" என்று கோபமாக பேசிய சரத்குமார், பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து விவாதம் செய்தார்..
வாக்குவாதம்: "அவருக்கு வாயில்லையா, நீங்க ஏன் என்னை கேட்கறீங்க?" என்று மற்றொரு பத்திரிகையாளரை கேள்வி கேட்ட சரத்குமார், "வாங்க மேடையில் போய் பேசுவோம்" என்று சொல்லிக்கொண்டு, மறுபடியும் மேடைக்கே சென்றுவிட்டார் சரத்குமார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேட்டிதான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications