"நயன்தாரா" கணவர் கம்முன்னு இருக்காரே.. நம்ம ஏரியா பையனா.. ஆனா இந்த திமுக இருக்கே.. வெடித்த துரைசாமி
நயன்தாரா விவகாரம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விபி துரைசாமி விமர்சித்துள்ளார்
சென்னை: நயன்தாராவுக்கு இரட்டை குழந்தை பிறந்தால் நமக்கென்ன? இந்த தமிழ்நாட்டுக்கு என்ன? இதுக்கு ஒரு குழு அமைக்க வேண்டுமா? என்று பாஜகவின் மூத்த தலைவர் விபி துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்தது.. திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போதெல்லாம், இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

தியாக புருஷன்
அத்துடன் தமிழுக்கு எதிராக செயல்படும் திமுக அரசை கண்டித்து இன்றைய தினம் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், துணைத்தலைவருமான விபி துரைசாமி பேசியதாவது: "கோவை குண்டுவெடிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தாமல், நயன்தாரா விஷயத்தை விவாதித்து வருகிறார்கள்.. நயன்தாராவுக்கு 4 மாசத்துல 2 குழந்தை பிறக்கலாமா? என்று கேட்டு ஒரு குழுவை போட்டிருக்காங்க.. நயன்தாராவுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தா நமக்கென்ன? அவர் புருஷன்காரன் மாபெரும் தியாகி.. அவரே கம்மென்று இருக்கிறார்..

நயன்தாரா
நுண்ணறிவுப்பிரிவு என்று ஒன்று இருக்காம்.. 2 ஆண் குழந்தை பிறந்ததுதான் நயன்தாராவுக்கு சந்தோஷமாம்.. அந்த சினைமுட்டை எங்கேயிருந்து எடுத்தது என்பதை கண்டுபிடிக்க ஒரு விசாரணை கமிஷன் போட்டிருக்காங்க.. அந்த சினைமுட்டையை அந்தம்மா வயிற்றில் செலுத்தியதும், அவரது உடல்நிலை எப்படி இருந்தது என்பதை கண்டுபிடிக்க, அதுக்கு ஒரு விசாரணை கமிஷன்.. ஆக, நயன்தாரா விஷயத்தில் விசாரணை கமிஷன் போடுவதில் உள்ள அக்கறை, கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் இல்லையே.. ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு அமைச்சர் பதவி தந்து அமைச்சராக்கினால், அவர் நயன்தாராவுக்கு பிறந்த குழந்தை குறித்து குழு அமைத்து விசாரிக்கிறார்..

வாடகை தாய்கள்
நயன்தாராவுக்கு எத்தனை குழந்தை பிறந்தால் தமிழ்நாட்டுக்கு என்ன? அது ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? 1972-ல் இருந்து சென்னையில் நான் இருக்கிறேன்.. "இங்கு வீடு வாடகைக்கு விடப்படும்" என்று போர்டுகள் தொங்கும்.. ஆனால், "இங்கு வாடகை தாய்கள் கிடைப்பார்கள்" என்று நுங்கம்பாக்கம் ஏரியாவில் போர்டுகள் தொங்குகின்றன.. தமிழ்நாடு எந்த அளவுக்கு திராவிட மாடலில் சென்று கொண்டிருக்கிறது பாருங்கள்.. அண்ணாமலை பேசுவதன் காரணமாகவே, கோவை குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களின் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன..

லால்குடி
மேற்கொண்டு உயிர்சேதம் வந்துவிடக்கூடாது என்றுதானே அண்ணாமலை சொல்லி வருகிறார்.. தமிழ்நாடு காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு, நயன்தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும்.. விக்னேஷ்சிவன் லால்குடியாம்.. அவன் நம்ம ஏரியா பையன்தான் போல.. நல்லா இருக்கட்டும்.. அவர்மீது எனக்கு பொறாமைலாம் எதுவும் இல்லை.. ஆனால், இரட்டை குழந்தை விஷயமா செலுத்தும் கவனத்தை, கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விவகாரத்திலும் செலுத்தினால் நல்லா இருக்கும்" என்றார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications