"வெண்ணிற ஆடை நிர்மலா"வுக்கு ஓபிஎஸ் "சீப் ஏஜெண்ட்".. பாயிண்ட் பாயிண்ட்டாக எகிறி அடித்த எடப்பாடி டீம்
ஓபிஎஸ்ஸுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் இல்லை என்று எடப்பாடி தரப்பு கூறுகிறது
சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு தொண்டர்களிடம் மட்டுமல்ல, சொந்த சமுதாயத்தில்கூட அவருக்கு செல்வாக்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடித்து சொல்கிறார்கள்..
தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆதிராஜாராம்.. கட்சியில் சீனியரும்கூட.. இவர் தீவிரமான எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியும்.. இவர் "ஒன் இந்தியா" தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
அந்த பேட்டியின்போது, ஓபிஎஸ் அரசியல், ஒற்றை தலைமை விவகாரம், ஓபிஎஸ்ஸின் பலவீனம், முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு ராஜாராம் விலாவரியான பதில்களை தந்துள்ளார்.. குறிப்பாக, ஓபிஎஸ்ஸுக்கு முக்குலத்தோரிடம் மதிப்பும், செல்வாக்கும் இல்லை என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார்.. அவர் நம்மிடம் சொன்னதாவது:

பாயிண்ட் - 1
"முக்குலத்தோர் சமுதாய மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள் என்பதெல்லாம் தவறான தகவல்கள்.. முக்குலத்தோர் என்று திரும்ப திரும்ப சொல்லாதீங்க.. எல்லா சாதிகளிலும், சில சங்கங்களில், அதுவும் இதையே தொழிலாக வைத்திருக்கும் சில சங்கங்கள், ஏதாவது ஒரு தலைவனுக்கு ஜெ.சொல்லி பணத்தை வாங்கி கொள்வார்கள்.. ஆனால், ஜாதியத்தை கொண்டு வந்து முன்னிறுத்தி பேசுவார்கள்.. அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.. அதனால் குறிப்பிட்ட சமுதாயத்தையே திரும்ப திரும்ப சொல்லி அவர்களை வம்பிழுக்காதீங்க..

பாயிண்ட் - 2
முக்குலத்தோர் சமுதாய வாக்கு வங்கி எங்களுக்கு கிடைக்காது என்று சொல்பவர்கள், இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்.. முக்குலத்தோர் சமுதாய வாக்குகள், இதே டிடிவி தினகரனுக்கு கோவில்பட்டியில் ஏன் வரல? முக்குலத்தோர் சமுதாயமோ, நாடார் சமுதாயமோ, கொங்கு சமுதாயமோ யாராக இருந்தாலும் சரி, கல்யாணம் மற்றும் கோயில் நிகழ்ச்சிகளுக்கு, கோயில் கொடைகளுக்கு மட்டும்தான் வந்து ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.. சமுதாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள்.. மற்றபடி, ஓட்டுப்போடுவதற்கெல்லாம் தங்கள் சமுதாயத்தை பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள்..

சுதாகரன்
1996-ல் சுதாகரனை வளர்ப்பு மகனாக அம்மா தத்தெடுக்கிறாங்க.. அவர் முக்குலத்தோர் சமுதாயம்.. ஒரு தலைவி, வளர்ப்பு மகன் என்று ஒருவரை முன்னிறுத்தினால், அவரைதானே அடுத்த இடத்தில் இளவரசராக முன்னிறுத்தி பார்ப்பார்கள்.. இதுதானே பொதுவான பார்வை.. அப்படி இருக்கும்போது, இதே 96-ல் இதே தென்மாவட்டத்தில், டெல்டாவில், அதிமுக வாஷ் அவுட் ஆனதே ஏன்? 25 ஆண்டுகளுக்கு முன்பே, கல்வியறிவு அவ்வளவாக இல்லாத காலத்திலேயே, சாதீய உணர்வுக்கு ஆட்படாமல் பொதுமக்கள் தெளிவாக வாக்களித்தார்கள்.. அதனால் இன்னமும் இப்படி சாதியை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கிறது, சாதீய ஓட்டு எங்களுக்குதான் என்பது இதெல்லாம் வேலைக்காகாது.

கருப்பசாமி பாண்டியன்
கருப்பசாமி பாண்டியன் இப்போ இருக்கிறார் இல்லையா.. இவர் அந்த காலத்திலேயே தென்மாவட்டங்களில், அந்த சாதியில் பெரிய தலைவர்.. அன்று மேல்சபை என்று சொல்லப்படும் எம்எல்சியை கலைக்கிறார்கள்.. ஆர்எம் வீரப்பன் அமைச்சராக இருக்கிறார்.. எம்எல்சி வாய்ப்பு போய்விட்டதால், ஆர்எம் வீரப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. அந்த நேரத்தில் திருநெல்வேலியில் இடைத்தேர்தல் வந்ததால், ஆர்எம்வீ-க்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், கருப்புசாமி பாண்டியனுக்கு இதில் உடன்பாடு இல்லை.. சீட் தரப்பட்டதில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார்..

எம்ஜிஆர்
உடனே எம்ஜிஆர், ஒரு பக்கம் விளம்பரம் வெளியிடுகிறார்.. அதில், "என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை கருப்புசாமி பாண்டியனே முன்னின்று நடத்துவார், இப்படிக்கு எம்ஜி ராமச்சந்திரன், பொதுச்செயலாளர், அதிமுக " என்று கையெழுத்து போட்டு விளம்பரம் தந்தார்.. அந்த அளவுக்கு எம்ஜிஆரே நம்பிக்கை வைத்தவர் கருப்பசாமி பாண்டியன்.. அந்த கருப்பசாமி பாண்டியன் அளவுக்கா இந்த ஓ.பன்னீர்செல்வம்? ராஜன் செல்லப்பாவைவிடவா இந்த ஓபிஎஸ்? காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பழகுவதற்கு இனிமையான திருநாவுக்கரசரை விடவா இந்த ஓபிஎஸ்? அவர்கள் எல்லாம் அரசியல் ரீதியாக வளர்ந்தவர்கள்.. பலருக்கு உதவிகளை செய்தவர்கள்..

வெண்ணிற ஆடை நிர்மலா
இவர்கள் வேறு வேறு கட்சிக்கு சென்றிருக்கலாம்.. அப்படி பார்த்தால் இதே ஓபிஎஸ், அன்னைக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு சீப் ஏஜெண்ட்டாக இருந்தவர்தானே? எத்தனை பேருக்கு ஓபிஎஸ் உதவியிருக்கிறார்? ஓபிஎஸ்ஸால் எத்தனை பேர் இந்த சமுதாயத்தில் பலனடைந்து இருக்கிறார்கள்? ஆனால், நான் மேலே சொன்ன அந்த தலைவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும்சரி, கட்சி செல்வாக்கு + சமூக செல்வாக்கு அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது.. திருநாவுக்கரசுக்கு இது இன்றைக்கும் உள்ளது.. ராஜன் செல்லப்பாவுக்கும் இந்த செல்வாக்கு உள்ளது..

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு சமுதாய செல்வாக்கு இல்லை. நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் இவர்கள் எல்லாம் அம்மா காலத்தில் இருந்தே இருப்பதால்தான், பதவி, பொறுப்புகளுக்கு வாய்ப்பு தந்தோம்.. இவர்களைவிட இளையவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதால்தான் உதயகுமாருக்கு பதவி தரப்பட்டுள்ளது.. ஏன் இதை சமுதாய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்? அப்படி பார்த்தால், கே.பி முனுசாமிக்குகூட தானே பதவி தரப்பட்டுள்ளது.. அதை ஏன் யாருமே பேசுவதில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications