• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை சித்ரா மார்பில் காயம்.. என்னை மிரட்டறாங்க.. பகீரை கிளப்பின ரோஹித்.. ஹைகோர்ட் மேஜர் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சித்ரா அன்று தற்கொலை செய்து கொண்டதுமே, ஏராளமான யூகங்களும், சந்தேகங்களும், சர்ச்சைகளும் சோஷியல் மீடியாவில் கிளம்பின.

இது தொடர்பாக சித்ராவின் பெற்றோர் மீடியாவில் பேட்டி தந்தாலும், சித்ராவின் நண்பர்கள் 2 பேர் தந்த பேட்டிகள்தான், பெரிதும் பரபரப்பை கிளப்பியது.

ஒருவர் சித்ராவின் தோழி ரேகா நாயர், மற்றொருவர் ரோஹித்.. இவர்கள் பல தகவல்களை சித்ரா - ஹேமந்த் குறித்து அப்போது பேசியிருந்தாலும், நேரடியாக இவர்களிடம் போலீசார் விசாரிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அந்தவகையில், ஹேமந்தின் அப்பாவுடன் பேசிய ஆடியோ ஒன்றை ரோஹித் அப்போது வெளியிட்டிருந்தார்..

ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே! ஒரே குரூப் தானா? 6 திருமணம் செய்து மோசடி! அதிகாலையில் எஸ்கேப்பான சந்தியா! இதான் இவங்களுக்கு வேலையே!

டார்ச்சர்

டார்ச்சர்

அதில், "அங்கிள் நான் இன்னிக்கு வரைக்கும் வாயே திறக்காம இருக்கேன்.. ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசக்கூடாது.. ஹேமந்த் என்ன பண்ணிட்டு இருந்தான், அந்த பொண்ணை எப்படி டார்ச்சர் பண்ணான்,எவ்ளோ அடிப்பான், எத்தனை முறை வீட்டை விட்டு ஓடியிருக்கு, எத்தனை ரத்த காயத்துடன் அடிச்சிருக்கான்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. ஆனால், அந்த பொண்ணை பத்தி தப்பா வெளியே வரக்கூடாது. சித்துவுக்கு குடிப்பழக்கம் இருக்குன்னு சொல்றீங்களே? அந்த பொண்ணு குடிக்காது.. ஹேமந்த் ஒழுங்கு கிடையாது.. அவன்கூட இருந்தவன் நான்..

ஒயின்

ஒயின்

அவன் இதுக்கு முன்னாடி எத்தனை பொண்ணுங்ககூட சுத்தியிருக்கான்? எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்திருக்கான் தெரியுமா? 3 பேர்கூட பழக்கம் இருக்குன்னு நீங்கதானே சித்து பத்தி மீடியாவில் சொன்னீங்க.. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, உங்க பையன் ஒழுங்கா? சித்து ஒயின் தவிர எதையுமே சாப்பிட மாட்டாள்" என்கிறார். இந்த 2 ஆடியோக்களை தவிர, வேறு சில தனியார் டிவி நிகழ்ச்சிகளிலும் ரோகித் பேட்டி தந்திருந்தார்.. எனினும், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை எதுவென்று உறுதியாக தெரியாவிட்டாலும், ஹேமந்த்தின் நண்பர் ரோஹித்தின் பெயரும், இந்த வழக்கில் சேர்ந்தே அடிபட்டு வந்தது..

 ஹேம்நாத்

ஹேம்நாத்

இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஹேமந்த் தற்போது ஜாமீனில் உள்ளார்.. அந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ரோஹித் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர்.. அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும்.. சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின்போது சாட்சியம் அளித்தேன்.. ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்தேன்..

 அடி ஆள்

அடி ஆள்

இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.. ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார்கள். அவரை வெளியே சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார்.. உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

 ஹேமந்த் கியாரண்ட்டி

ஹேமந்த் கியாரண்ட்டி

அப்போது, ஹேமந்த், தன்னுடைய நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தில் அது உண்மை இல்லை என்று தெரியவந்தது.. எனவே, இந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், சையத் ரோஹித்தை மிரட்ட மாட்டேன் என்று ஹேமந்த் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.. இதனை பதிவு செய்த நீதிபதி, ஹேமந்த்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்..

 மர்ம முடிச்சு

மர்ம முடிச்சு

ஆக, ஹேமந்த் ஜாமீன் பெற்றுவிட்டார்.. ஹேமந்த் நண்பர் தொடர்ந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.. எனினும், உண்மையிலேயே அந்த துணிச்சல்கார பெண் சித்ரா எப்படித்தான் இறந்திருப்பார்? என்பது தெரியாமலேயே உள்ளது.. எப்படியாவது போலீஸ் தரப்பில் அந்த உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுவிடும் என்று சித்ராவின் ரசிகர்கள் பெருத்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.. ஆனாலும், காலங்காலமாக, நடிகைகளின் மரண மர்ம முடிச்சுகள் மட்டும் பெரும்பாலும் அவிழ்க்கப்படுவதேயில்லையே ஏன்?!

English summary
Famous Actress VJ Chitra case issue and police explain to Madras High Court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X