அபார்ஷன் மாத்திரை தந்த பிரபல நடிகர்? உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக டார்ச்சர்.. மனைவி சொல்றது நிஜமா
சென்னை: சமீபகாலமாகவே இளம் தம்பதிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன.. புரிதல் குறைபாடுகள் உள்ள காரணத்தினால், உணர்ச்சிவசப்பட்டு ஒருவருக்கொருவர் தடித்த வார்த்தைகளால் தாக்கி கொள்வதும், ஒருவரையொருவர் விட்டு பிரிவதும் என குடும்பமே பிரிந்துவிடுகிறது.. சிலசமயம் வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் தேங்கி கிடப்பதற்கு இதுபோன்ற இளம் தம்பதிகள்தான் பெரும்பாலும் காரணமாக உள்ளதாக கூறுகிறார்கள்.. இதற்கு திரை பிரபலங்களும் விதிவிலக்கல்ல.
திரையுலகில் விவாகரத்துகள் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.. உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்தவர்கள்கூட, இன்று நீதிமன்ற வாசலை நாடுகிறார்கள்..

2 வருடங்கள் சேர்ந்து வாழ்வது என்பதே இப்போது அரிதாகிவிட்டது.. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுதான் நிலைமையாக உள்ளது.
இதோ உத்தர பிரதேசத்திலும் ஒரு ஜோடி இப்படித்தான் திருமணம் செய்து, விவாகரத்து வரை சென்றுள்ளார்கள்.. பிரபல போஜ்புரி நடிகர் பவன்சிங், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த ஜோதிசிங் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரபல நடிகர் - மனைவி
இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஆரம்பமாகி உள்ளது.. இதனால் தினம் தினம் இருவருக்கும் வாக்குவாதங்களும், சண்டைகளும் வெடித்து வந்துள்ளன.. ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த இருவருமே, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜோதிசிங், தன்னுடைய கணவர் பவன்சிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் ஜோதிசிங் சொன்னதாவது:
அபார்ஷன் மாத்திரைகள்
"கல்யாணம் ஆகி சில மாதங்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்தோம்.. ஆனால், அதற்கு பிறகு என் கணவர் என்னை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்த துவங்கி விட்டார்.. குழந்தை வேண்டும் என்று ஏங்குவதாக என்னிடம் சொன்னார்.. ஆனால், அதற்கு மாறாக எனக்கு அபார்ஷன் மாத்திரைகள் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் மாத்திரைகள் கொடுத்தபோதும் நான் அதற்கு எதிர்ப்பு காட்டினேன்.. ஆனால் அவர் என்னை மிகவும் சித்ரவதை செய்தார்.
சம்பவத்தன்று அதிகாலை 2 மணிக்கு கூட 25 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டேன்.. மாத்திரைகளை சாப்பிட்டதுமே மயங்கினேன். ஆனாலும் இரவு வெகு நேரமாகிய பிறகே அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன்" என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்..
இதனிடையே மனைவி ஜோதிசிங்கின் குற்றச்சாட்டுகளை, பிரபல நடிகர் பவன்சிங் வலுவாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ஜோதிசிங் என்னை சந்திக்க லக்னோவுக்கு வருவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அவரது நோக்கங்களை நான் தெரிந்து கொண்டேன்..
யார் சொல்வது உண்மை
நான் அவரிடம் எப்படி நடந்து கொண்டேன் என்பது எனக்கும், அவருக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும்.. விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று ஜோதி மறுத்துவிட்டார். ஒரே வீட்டில் வசிக்கும்போது விவாகரத்து கேட்பது சரியா? என்று நானே அவரிடம் கேட்டேன். ஆனாலும் அவர் பதிலளிக்கவில்லை" என்றார்..
கணவன் - மனைவி இரு தரப்பிலுமே மாறி மாறி புகார்கள் சொல்லி உள்ளதால், இதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.. எனவே இதுகுறித்த முறையான விசாரணையும் நடைபெறுவதாக தெரிகிறது. எனினும் பிரபல நடிகர் மீது, அவரது மனைவி வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு, திரை வட்டாரத்தில் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications