கேப்சன் தான் வேறலெவல்.. தனக்காக ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நடிகர் ஜிஎம் குமார்!

பிரபல திரைப்பட நடிகர் ஜிஎம் குமார் தனக்கு முன் தேதியிட்டு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு போஸ் கொடுத்து அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ஜிஎம் குமார் தனக்கு முன் தேதியிட்டு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு போஸ் கொடுத்து அதை போட்டோ எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்த கேப்சன் தான் சூப்பராக இருக்கிறது.

ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்று நடிகர் ஜிஎம் குமார் கொடுத்த கேப்சன் சிறப்பாக இருப்பதாக அவரை நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தீ, மாத்தியோசி, அவன்இவன், மிளகா, கர்ணன், பல்லு படாமா பாத்துகோ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் ஜி எம் குமார்.

சினிமா காட்சி

சினிமா காட்சி

இவர் தற்போது தமிழ் திரைப்படங்களிலும், சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஒரு சினிமா ஷூட்டிங்கில் நடித்து வரும் ஜிஎம் குமார், அங்கு அவர் உயிரிழப்பது போன்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சிகளை அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பிணமாக படுத்தபடி, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

கரிய மாணிக்கம்

கரிய மாணிக்கம்

இந்நிலையில் ஜிஎம் குமார் மறைந்துவிட்டதாக தோற்றம் மறைவு போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த ஷூட்டிங்கில் ஜிஎம் குமார் பெயர் கரிய மாணிக்கம் என்று இருக்கிறது.கிடாக்குளம் கிராம மக்கள் போஸ்டர் ஒட்டியது போல் ஷுட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.

நகைச்சுவை

நகைச்சுவை

அந்த போஸ்டர் அருகில் நின்று போஸ் கொடுத்திருக்கிறார் ஜிஎம் குமார். அதில் ஜிஎம் குமார் மே மாதம் 1ம் தேதி இறக்கப்போவதாக போஸ்டரில் உள்ளது. அதாவது சினிமாவுக்காக அப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டோவை பகிர்ந்துள்ள ஜிஎம் குமார் ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்று ஸ்மைலி போட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் முன்கூட்டியே மரண அறிவிப்பு , யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் என்று கிண்டலாக கேட்டுள்ளனர்.

மரணம் செலவு

மரணம் செலவு

ஜிஎம் குமார் வெளியிட்ட இன்னொரு பதிவில்,பிணமாக படுத்தபடி, சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அதற்கு கொடுத்த கேப்சனில், " வந்தது தெரியும் போவது எங்கே, வாசல் நமக்கே தெரியாது, வந்தவரெல்லாம் தங்கிவிட்டால், இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும், போனால் போகட்டும் போடா..." என்று போட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+