அண்ணா நகரில் சிக்கிய பிரபல நிறுவனம்.. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் இருந்து பறந்த வார்னிங்
சென்னை: சென்னை அண்ணா நகரில் செயல்பட்ட பிரபல முடிமாற்று அறுவை சிகிச்சை மையத்தில் போலி டாக்டர்கள் மூலம் முடிமாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சிகிச்சை மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சருமப் பொலிவு சிகிச்சைகளை மருத்துவம் பயிலாதவர்கள் மேற்கொண்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்திருக்கிறது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான 'மிஸ்டர் ஹேர் கிளினிக்' என்ற முடி மாற்று சிகிச்சை மையம், உரிய அனுமதி இன்றிச் செயல்பட்டு வருவதாக அண்மையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு புகார் பறந்தது. புகாரின் பேரில் ஊரக மருத்துவச் சேவை இயக்குநரக இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் முடிமாற்று சிகிச்சை மையத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணா நகர் சிகிச்சை மையத்தை ராஜாராம் நடத்தி வந்தார். அவர் உரிய அனுமதி இல்லாமலும், உரிய பயிற்சி மற்றும் அதற்குரிய படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்டும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்ததை அதிகாரிகள் அங்கு அதிரடியான ரெய்டில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து முடி மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 15 பேரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்து இருப்பதும், இதற்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணம் பெற்று வாடிக்கையாளர்களுக்கு முடிமாற்று சிகிச்சை அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இங்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்வீர் சிங் (வயது 33), அர்வீப்சிங் (24) ஆகிய இருவரும் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு முடி மாற்று சிகிச்சை அளிக்கக்கூடிய ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரிந்து வந்ததும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் சித்திக் (27) முடி மாற்று சிகிச்சை பெறுபவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
முடி மாற்று சிகிச்சையால் யாருக்காவது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும், இங்கு சிகிச்சை பெற்றவர்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது அந்த முடி மாற்று சிகிச்சை மையத்தை மூடி விட்டு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவிப்பில் கூறுகையில், "முடி மாற்று சிகிச்சை மற்றும் லேசர் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். உரிய பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயம்.
சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நபரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகுதிகள் இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications