பியூட்டி பார்லரில் ஸ்டார் மனைவியின் ஜாலி வீடியோ.. ரோஜா பூவும், மது பாட்டிலும்.. ஜோடியா சிக்கிட்டாங்க
சென்னை: சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து, லைக்குகளை அள்ளிக் கொண்டிருந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கை, ஒரே ஒரு வீடியோவால் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... பியூட்டி பார்லரில் துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த பெண் யார்? அவருக்கு என்னாச்சு? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தை சேர்த்நவர் காஞ்சன் குமாரி.. இந்த பெண் சமூக வலைதளங்களில் சுமார் 3 லட்சம் ஃபாலோயர்களை வைத்திருப்பவர்.. இன்ஸ்டா பிரபலமான இவர், எந்த வீடியோ போட்டாலும் அது லைக்ஸ்களை அள்ளி கொண்டு போகுமாம்.. அதனால் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் வீடியோவா பதிவிட்டுவிடுவாராம்..

பீகார் ஸ்டார் பிரபலம்
அப்படித்தான் காஞ்சன் குமாரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பியூட்டி பார்லர் ஒன்றில், இன்ஸ்டா வீடியோ எடுக்க சென்றுள்ளார்.. அங்கே பார்லரில் உட்கார்ந்து கொண்டு, கையில் ஒரு துப்பாக்கியை வைத்து கொண்டு, போஜ்புரி பாடலுக்கு வீடியோ எடுத்துள்ளார்.. பிறகு அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோவை பார்த்ததுமே மொத்த நெட்டிசன்களும் ஷாக்கானார்கள்..
துப்பாக்கி எப்படி இவருக்கு கிடைத்தது? உரிமம் பெற்ற துப்பாக்கியை சட்டவிரோதமாக பொதுவெளியில் எப்படி கையாளலாம்? என்ற கேள்விகள் எழுந்தன.. இது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே புகார்களும் எழுந்திருந்தன.
ரோஸ் டே செலிபிரேஷன்
இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7ம் தேதி "ரோஸ் டே" கொண்டாடப்பட்டடது.. ரோஸ் டே என்றால், காதலர் தின வாரத்தின் முதல் நாளாக பிப்ரவரி 7ம் தேதி கொண்டாடப்படும் ஒரு தினமாகும். இது பீகார் மற்றும் வட மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களால் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை வழங்கி அன்பை பரிமாறிக்கொள்ள கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், காஞ்சன் குமாரியும் ரோஸ் டே கொண்டாடினார்.. இதற்காக தன்னுடைய கணவர் ராகுல் குமாருக்கு ரோஜா பூவை காதலுடன் வழங்கினார்.. அதுமட்டுமல்லாமல், மது பாட்டில் மற்றும் மது கோப்பையையும் சேர்த்து வழங்கியுள்ளார்... இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி, இதுவும் சர்ச்சையை கிளப்பிவிட்டது..
கணவன் மதுக்கோப்பை - வீடியோ
காரணம், பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், சட்டத்தை மீறி மதுவை பயன்படுத்திய இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.. ஒரு பிரபலமே சட்டத்மைத அவமதிக்கலாமா? என்றும் கேள்விகள் எழும்பின..
இதனால் போலீஸ் வரை விஷயம் கொண்டுபோகப்பட்டது.. உடனே இது குறித்து முங்கேர் எஸ்பி சையத் இம்ரான் மசூத் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, சட்டத்தை மீறிய காஞ்சன் குமாரி, அவரது கணவர் ராகுல் குமார் மற்றும் அந்த துப்பாக்கியின் உரிமையாளர் விஷால் குமார் ஆகிய 3 பேர் மீதும் காசிம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இப்போது அந்த பெண்ணின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... துப்பாக்கி உரிமம் யாருடையது, மது பாட்டில் எப்படி கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மனைவி ஜாலி வீடியோ
இந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது..புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் சட்டவிரோதமான செயல்களை அதாவது துப்பாக்கியைக் காட்டுவது, மது அருந்துவது போன்று பொதுவெளியில் பதிவிடுவது, தற்காலிகப் புகழைத் தந்தாலும் நிரந்தரமான சட்ட சிக்கல்களையும் அவப்பெயரையுமே தேடித்தந்துவிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும்..
அதிலும் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டிருப்பவர்கள் சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது. ஒரு நிமிடப புகழுக்காகத் தனது எதிர்காலத்தையே அடகு வைப்பது புத்திசாலித்தனம் கிடையாது என்பதையும் நாம் இங்கே வலியுறுத்த வேண்டியிருக்கிறது...!!!












Click it and Unblock the Notifications