டி.ராஜேந்தரின் "இன்ஷா அல்லாஹ்".. நடிச்ச பொண்ணும் கேக்கல, படிச்ச பொண்ணும் கேக்கல.. ஹனீபா சொல்லிட்டாரே
சென்னை: பிரபல டைரக்டர் டி.ராஜேந்தர் தந்த பேட்டி ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. சிம்புவின் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் டி. ராஜேந்தர்.. டி.ராஜேந்தர் - உஷா தம்பதிக்கு சிலம்பரசன் (எ) சிம்பு, குறளரசன், இலக்கியா என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

சிவபக்தரான சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் தன் திறமையால் தக்க வைத்து வருகிறது.. டி.ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணமாகி கிறிஸ்தவ மதத்தை தழுவியவர் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.
மசூதிகள்: அதேபோல, டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன், திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.. 4 வருடங்களுக்கு முன்பு, சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவினார் குறளரசன். குறளரசன் மதம் மாறியது குறித்து டி.ராஜேந்தர் அப்போது சொல்லும்போது, "நான் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவன். அதனால் குறளரசன் மதம் மாற தடையேதும் விதிக்கவில்லை" என்றார்.
டி.ஆரின் வீட்டில் சர்வம் சர்வமதம் என்ற கோட்பாடு உள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டும், ஈர்க்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு டி.ராஜேந்தர் பேட்டி தந்திருந்தார்.
ஒரே கேள்வி: அந்த பேட்டியில் நிறைய கேள்விகள் டிஆரிடம் கேட்கப்பட்டது என்றாலும், சிம்புக்கு இன்னும் திருமணமாகாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த ஒரு கேள்விக்கு டி.ராஜேந்தர் சொன்ன பதில்கள்தான் இது:
"சிம்புவுக்கு ரெட் கார்டு கிடைக்கிறது பற்றி கேட்கறீங்க.. காய்த்த மரத்துக்குதான் கல்லடி.. என் மகன் காய்த்த மரம். அவன் நெஞ்சிலே பாய்ந்து விட்டது உரம்.. அவன் கலை என்பது இறைவனிடத்தில் அவன் பெற்றுவந்த வரம்.
சிம்புவுக்கு கல்யாணம் நடக்கணும்னா, என் பையன் இருக்கணும் நல்லா - கல்யாணமாகி அவன் வாழ வேண்டும் நல்லா - அதற்கு காரணம் இன்ஷா அல்லா.
அல்லாவின் நாட்டம்: அல்லாவின் நாட்டம் இருந்தால் திருமணம் நடக்கும். என் பையன் நடிச்ச படம் வரன், ஈஸ்வரன்.. என் பையனுக்கு என்னால தேட முடியல சார் வரன். ஏன் என்றால், இறைவன்தான் தேடி தரணும் அந்த வரன். அவன்தான் காக்க வேண்டும் இவன் நலன்.
என் பையன் என்கிட்ட சினிமாவில் நடித்த பொண்ணு வேணும்னு கேட்டால்கூட பரவாயில்லையே. நான் யாரையாவது தேர்வு செய்து தருவேன். இல்லாட்டி, படிச்ச பொண்ணு வேணும்னு கேட்டால், பயங்கரமான குவாலிபிகேஷன் உள்ள படிச்ச பொண்ணை, நான் தேடி தந்துடுவேன். இல்லைன்னா, நல்ல பணம் படைச்ச பொண்ணு வேணும்னு கேட்டால், எனக்கு எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள்.. 10 லட்சம் கோடி வேணுமா? 10 ஆயிரம் கோடி வேணுமா? வாங்கிக்குங்க.. சிலம்புவை மட்டும் என் பொண்ணுக்கு கட்டிக்கொடுங்க என்று சொல்லக்கூடிய நண்பர்கள் எனக்கு இருக்காங்க.
எங்கே போவேன்: ஆனால், என் பையன், ஒரு நடிச்ச பொண்ணையும் கேக்கல, படிச்ச பொண்ணையும் கேக்கல.. பணம் படைச்ச பொண்ணையும் கேக்கல. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணா, பிடிச்சு கொடுன்னு சொன்னால், நான் எங்கே சார் போவேன்? என் மனைவிதான் எங்கே போவாங்க? இதுக்கு கடவுள்தான் சார் கை கொடுக்கணும். நாங்க 2 பேருமே கடவுள்கிட்ட கையேந்த ஆரம்பிச்சிட்டோம்.
"இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை" என்று ஹனீபா பாடின மாதிரி, அந்த கடவுள்தான் கையேந்தணும்.
கெட்டி மேளம்: நிச்சயமா, அந்த கடவுள் அருளாள், என் பையனுக்காக பிரார்த்தனை செய்யக்கூடிய அத்தனை ரசிகர்களின் அன்பால், ஆதரவால், அபிமானத்தால், என் பையனை பரிவுடன் பார்க்கும் அத்தனை சகோதரிகளின் பிரர்த்தனைகள், நிச்சயம் பலிக்கும். சீக்கிரமா கெட்டி மேள சத்தம் எல்லாருடைய காதுகளிலும் ஒலிக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications