Jana nayagan Audio Launch-ல் விஜய் ரேம்ப் வாக்கின் போது! தடையை மீறி தவெக கொடி காட்டிய நபர் கைது!
கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கட் கலீல் எனும் மைதானத்தில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு தடையை மீறி ரசிகர் ஒருவர் தவெக கொடியை காண்பித்ததை அடுத்து அவர் மலேசியா நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி திருவிழா என்ற பெயரில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற 23 சூப்பர் டூப்பர் பாடல்களை பல்வேறு பாடகர்கள் பாடினர். இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜும் அஞ்சனாவும் தொகுத்து வழங்கினர்.
அது போல் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. இதில் அனிருத், அட்லியை கட்டிபிடித்து விஜய் செல்பி எடுத்தார். பின்னர் விஜய் அங்கிருந்த ரேம்பில் நடந்தார். விஜய்யை பார்த்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
அப்போது ஒரு ரசிகர், தவெக கொடியை காண்பித்தார். அதை பார்த்த மற்ற ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். மலேசியாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு கட்சி கொடி, கட்சியின் நிறத்தை குறிக்கும் அம்சங்கள் உள்ளிட்டவை கொண்டு வரக் கூடாது என மலேசிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் TVK TVK என சிலர் சப்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொடியை காட்டிய ரசிகரை கோலாலம்பூர் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் மலேசியா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசியல் பேசக் கூடாது, தவெக கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்த எந்த ஒரு அம்சமும் இடம்பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே, எனவே இதை அரசியல் மேடையாக்க கூடாது என படக்குழுவுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலைக் குறிப்பிடும் பேனர்கள், பொருட்கள், சின்னங்களை பயன்படுத்தக் கூடாது. பொது அமைதியையும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருள்களை கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக கொடியில் அந்த இரு நிறங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருப்பது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications