விஜய் பயணித்த கார் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது.. ரொம்ப டேஞ்சரா இருக்கே.. என்ன நடந்தது
சென்னை: நடிகர் விஜய் தனது GOAT திரைப்படத்தின் ஷீட்டிங்கிற்கு கேரளா சென்ற நிலையில், அங்கே அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பிற்கு முழுக்க போட்டுவிட்டு அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்தார்.

விஜய்: இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக்கும் அத்திரைப்படத்திற்கு The Greatest of All Time என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் நிலையில், பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் யோகிபாபு என்று மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் படம் என்றால் ஏகப்பட்ட சிஜி காட்சிகள் இருக்கும். இந்தப் படம் அதற்கு விதிவிலக்கு இல்லை. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தாரைப்படத்தின் அறிவிப்பு முதல் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என அனைத்துமே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்தாண்டு இறுதியில் இத்திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.
ரசிகர்கள்: இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது கேரளாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க விஜய் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். விஜய்யை பார்க்க விமான நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருந்திருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், விஜய் ஹோட்டல் செல்லும் வரை அவருடன் இணைந்து டூவீலர் மற்றும் கார்களில் பேரணி போலச் சென்றனர்.

பிளானை மாற்றிய விஜய்.. லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்ததும் நடந்த "திடீர்" மாற்றம்! ஆஹா இது வேறயா
போகும் வழி முழுக்க தலைவா.. தலைவா.. தளபதி..தளபதி என கோஷமிட்டு கொண்டே விஜய் ரசிகர்கள் சென்றனர். காரில் செல்லும் போதே விஜய் அவர்களைப் பார்த்து கை அசைத்தார். மேலும், கவனமாக வண்டியை ஓட்டும்படியும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் அவர் உடனேயே சென்றனர். அவர் ஹோட்டல் செல்லும் வரை இதை நிலை தான் தொடர்ந்தது.
கண்ணாடி: ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக விஜய்யை காண முண்டியடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் அவரது கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், காரும் சேதமடைந்தன. விஜய் மீது கொண்ட பேரன்பால் அவரை காணத் துடித்த ரசிகர்களின் செயலே அவர் வந்த காரை இப்படி ஆக்கிவிட்டது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாசம் இருக்கலாம் அதுக்குனு இப்படியா என்ற ரேஞ்சில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் இந்த கோட் படத்திற்குப் பிறகு ஓரிரு படங்களில் மட்டும் நடிப்பார் எனத் தெரிகிறது. அதன் பிறகு அவர் முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தான் தனது இலக்கு என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications