பிளானை மாற்றிய விஜய்.. லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்ததும் நடந்த "திடீர்" மாற்றம்! ஆஹா இது வேறயா
சென்னை: லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை வெளியான நிலையில், நடிகர் விஜய் திடீரென தனது தமிழக வெற்றிக் கழக கட்சி பிளான்களை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இதில் தமிழ்நாட்டிற்கு முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாகக் கவனித்து வருகிறது.
லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெறும். ஆனால், இந்த முறை பலருக்கும் சப்ரைஸாக முதலாம் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்து கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இப்படி முன்கூட்டியே தேர்தல் நடத்துவதால் பல கட்சிகளும் தங்கள் பிளான்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல இந்த லோக்சபா தேர்தல் காரணமாகப் புதிதாகக் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய்யும் தனது பிளானை மாற்றி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், உறுப்பினர் சேர்கையில் முதலில் கவனம் செலுத்தினார். முதல் நபராகக் கட்சியில் இணைந்த நிலையில், அதுவும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆலோசனை: மேலும் விஜய் தனது கட்சி தொடர்பாக அவ்வப்போது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேநேரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட நிர்வாகிகளுடன் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.
ஒத்திவைப்பு: இந்தச் சூழலில் தான் லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டமும் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டு இருந்த ஆலோசனைக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்டமாக எப்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்பது குறித்த தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக விஜய் அரசியலுக்கு வருவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் அவர் அதிகாரப்பூர்வமாகத் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், கட்சியை ஆரம்பித்துவிட்டாலும் கூட லோக்சபா தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என்ற முடிவை விஜய் எடுத்துள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள விஜய், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே நடித்துவிட்டு முழுமையாக சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார்.
இது மட்டுமன்றி லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இதில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார். இருந்த போதிலும், தேர்தல் நெருங்கும் நிலையில், சில கட்சிகள் அவரது ஆதரவைப் பெற முயல்வதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications