ஹீரோ முரளியை ஞாபகம் இருக்கா.. அவர் பண்ண வேலைய பாருங்க.. "கடவுள் முரளி வாழ்க".. டக்கென நின்ற "இதயம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் முரளியை அவரது ரசிகர்கள் இன்னமும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.. சமீபத்தில் அவரது பிறந்தநாளின்போதுகூட, அவரது நினைவுகளை பதிவிட்டு, கண்ணீர் விட்டனர்.

வீரம், ஆவேசம், துடிப்பு, காதல், காதலிக்கு கட்டுப்படுதல், தவிதவிப்பு, பரிதவிப்பு, அவமானப்பட்டு கூனிகுறுகி நிற்பது என அனைத்தையுமே படங்களில் கொட்டி, மக்களின் மனதில் அசால்ட்டாக உட்கார்ந்து கொண்டார்.

அமைதியான முகம், அதில் எப்போதும் ஒரு இனம்புரியாத சோகம், நம்மில் ஒருவர் போலவே இருக்கும் சாதாரண தோற்றம், இதெல்லாம்கூட முரளியிடம் ரசிக்க வைத்திருக்கலாம்.முரளியின் படங்களை தூக்கி நிறுத்த அடிநாதமாக இசைஞானி இளையராஜாவும் உதவிக்கொண்டேயிருந்தார்..

Fantastic actor Murali and do you know that actor Murali helped the poor

ஆர்ப்பாட்டம்: கிட்டத்தட்ட நம்ம ஜெய்சங்கர் போலதான்.. இயக்குனர்களுக்கு தொந்தரவு தராத நடிகர்.. தயாரிப்பாளர்களுக்கு குறைந்த செலவில், லாபத்தை பெற்று தந்தவர். சூடு பறக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, அவசியமேயில்லாமல் எதையாவது நொறுக்கி கொண்டு உள்ளே வரும் மாஸ் என்ட்ரிகளோ இல்லாமல்.. அமைதியாக.. ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து முடித்தவர் முரளி!!

சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்டிருந்த இதே சினிமா "நிற அரசியலில்", தனக்கான பாதையை, தன் வெள்ளை மனசை விரித்து வைத்து அதில் மென்மையுடன் நடை போட்டார்!!

ஜெயலலிதா: நடிப்பையும் தாண்டி சில அடிப்படை குணாதிசயங்கள் முரளியிடம் பொதிந்திருந்தது பலரும் அறியாதது.. முரளிக்கு என்னவோ, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அப்படி ஒரு பாசம்.. நிறைய மரியாதையை வைத்திருந்தார்..

அதிமுகவில் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் சென்றார்.. ஆனால், எதிர்கட்சிகள் யாரையுமே தாக்கி பேசாமல், குறிப்பாக, தரக்குறைவான விமர்சனங்களை முன்வைக்காமல், வெறும் நாகரீக பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.. இந்த குணம், அன்றைய எஸ்எஸ் சந்திரனிடமும் இல்லை.. இன்றைய ராதாரவியிடமும் காணப்படவில்லை..!!

விசுவாசம்: கர்நாடகத்தை சேர்ந்த நடிகர்கள் பலர் இங்கு இருந்தாலும், தமிழக மக்களுக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தவர் முரளி.. அதேபோல், காவிரி பிரச்சனையின்போது, ஒட்டுமொத்த கன்னட உலகமும் திரண்டு போராட்டம் செய்தபோது, தமிழக மக்களுக்காக நம்முடனேயே ஆதரவு தந்து நின்ற நம்பிக்கைவாதி முரளி..!

யார் அந்த நபர்: அன்றைய காலகட்டத்தில், "கடவுள் முரளி வாழ்க" என்று திடீரென ஒரே இரவில் சென்னையில் உள்ள பெரும்பாலான சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்.. அது வெறும் கரித்துண்டினால் கையினாலேயே எழுதப்பட்டிருக்கும்.. யார் எழுதுவது என்று பொதுமக்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. கடைசியில் அவர் மதுரையை சேர்ந்த முரளியின் முரட்டு ரசிகராம். தேவையில்லாமல் இப்படி சுவற்றில் கிறுக்கக்கூடாது என்று முரளி அவரை பலமுறை கண்டித்து, எந்த காரணத்தை கொண்டும் சென்னைக்கு வர கூடாது என்றும் அன்பு கட்டளை போடுவாராம்..

அதேசமயம், அவருக்கு தேவையான உதவியும் செய்திருக்கிறார்..ஆனால் மறுபடியும், சென்னை சுவர்களில் "கடவுள் முரளி வாழ்க" என்று எழுதப்பட்டிருக்கும்.. இந்த செய்தி முரளிக்கு எட்டியதும், ஆட்களை போட்டு, "அவனை இங்கே கண்டுபிடித்து கூட்டிட்டு வாங்க" என்று சொல்வாராம்.. ஆனால், முரளி இறந்ததும், அப்படி ஒரு வாசகத்தை சென்னை சுவர்களில் பார்க்கவே முடியவில்லை.

இறுதிசடங்கு: "காலமெல்லாம் காதல் வாழ்க" படத்தின் கிளைமாக்ஸ் சீனை ஒரு ஆஸ்பத்திரியில் ஷூட்டிங் எடுத்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது முரளியின் படுக்கைக்கு சற்று தொலைவே, ஒரு வயதான பெரியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.. ஓரிரு நாட்களில் அவரது இறுதி சடங்கும் முடிந்து, அந்த குடும்பத்தினர் ஷூட்டிங்கில் இருந்த முரளியை தேடி வந்தனர்..

திடீரென முரளி காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி சொல்வதை பார்த்து, சக நடிகர்கள் எதுவும் புரியாமல் விழித்துள்ளனர்... விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஏழ்மையில் இருந்த, பெரியவரின் சிகிச்சை செலவை அந்த ஆஸ்பத்திரியில் அத்தனை நாளும் முரளிதான் கவனித்து வந்திருக்கிறார் என்று.. இது உடனிருந்த மற்ற நடிகர்களுக்குகூட தெரியாதாம்!

இதயம்: "முரளி சாரால்தான் நான் இன்னைக்கு உயிரோட இருக்கேன்" என்று எத்தனையோ பேர், அந்த ஈர மனசை பாராட்டுகிறார்கள்.. ஆனால் அதை கேட்க முரளி இன்று உயிருடன் இல்லை... திடீரென ஒருநாள் துடிக்க மறந்து, டக்கென நின்றுவிட்டது அந்த "இதயம்"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+