பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்.. அதுவும் நாளை முதலே.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Fantastic announcement and admission of students from class 1 to 9 in government schools from tomorrow

அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பதும், மூடுவதுமாக இருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் 'ஆன்லைன்' மூலமே பாடங்களை கற்கின்றனர்.

மாணவர் சேர்க்கை: இப்போது மறுபடியும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பல பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. அதனால், மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு பரிசை அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகவும் குறைந்த விலையில் இருந்தது.

அதன் பிறகு அரசின் முயற்சிகளால் மாணவர் சேர்க்கை சதவீதம் படிப்படியாக உயர்ந்தது. பலரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர்.

ஸ்பெஷல் அறிவிப்பு: இதனையடுத்து கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது 2023 - 2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் நன்னிலம் அருகே உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதாவது திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் இந்திரா அவர்கள் வரவுள்ள கல்வியாண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் பள்ளியில் சேரும் மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Fantastic announcement and admission of students from class 1 to 9 in government schools from tomorrow

இதுஒருபுறம் இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி இன்று முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

மெகா பேரணி: இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+