ரிசர்வேஷனில் சூப்பர் அதிரடி.. முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றலாமா? IRCTC தந்த உறுதி
சென்னை: ரயிலில் டிக்கெட் ரிசர்வேஷன் உட்பட பஸ், விமான டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, வீல் சேர், பயணியர் காத்திருப்பு அறை, பேட்டரி வாகனம் முன்பதிவு போன்ற பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும் ஐஆர்சிடிசி தளத்தில் புதிய வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது.. அதனால்தான் இந்தியன் ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், ஏராளமான வசதிகளை ஆன்லைனில் செய்து தந்துள்ளது..

முன்பதிவு: அந்தவகையில், ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கும் தாராளமாக மாற்றலாம்.. தனிப்பட்ட நபர் ஒருவர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்தால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து கடிதம் வழங்க வேண்டும்.
பிறகு, தங்கள் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு அதாவது ரத்த பந்தம் உள்ளவர்களுக்கு தங்களது டிக்கெட்டை மாற்றித்தரலாம். இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதை பிறருக்கு மாற்றுவதானாலும், தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.
பயணம் ரத்து: திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாக செல்வோர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கெல்லாம் கூடுதல் கட்டணம் இல்லை.. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
இதற்கு பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே இப்படி பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். வேறொருவருக்கு இப்படி டிக்கெட்டை மாற்ற முடியுமே தவிர, வேறு தேதிக்கு டிக்கெட்டை மாற்றி பயணிக்க, ஐஆர்சிடிசி இணையதளத்தில் வசதி இல்லை.
பயணிகள் கோரிக்கை: இதன்காரணமாக, டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இதற்காக கட்டணமும் பிடித்தம் செய்யப்படுகிறது. ஒரு பயணிக்கு, 60 ரூபாயும், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் என்றால் பயணிக்கு, 120 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, பயணத்தை வேறொரு தேதிக்கு, ஆன்லைனில் மாற்றும் வசதியை ரயில்வே கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் இந்த கோரிக்கையானது, ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த இணையதளத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும்போது, பயணியரின் கோரிக்கை பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த டிக்கெட்டை, வேறொரு தேதிக்கு மாற்றும் வசதி ஏற்பட்டுவிட்டால், இது பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications