Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம், சிட்டா இனிமே ஈஸி.. அதைவிடுங்க, 2 ஏக்கர் நிலம் இருந்தாலும் பட்டா.. தமிழக அரசு பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவை பொதுமக்களின் வசதிக்காக எளிதாக்கியிருப்பதாகவும், ஒருவர் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி, மனைகளாகப் பிரித்திருந்தால் மனை விற்பனை பதிவின்போது பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு இன்று பெருமிதம் தெரிவித்திருக்கிறது.. அந்தவகையில், பட்டா, சிட்டாவை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளும் வசதிகள் என்னென்ன தெரியுமா?

ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தின் பெயர்தான் பட்டா எனப்படும்.. பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் நில உரிமைதாரரின் பெயர், சர்வே எண், உட்பிரிவு, நன்செய் நிலம்/புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் போன்றவை இந்த ஆவணத்தில் பதிவாகியிருக்கும்.

Patta

பட்டா: பட்டாவின் ஒரு பகுதிதான் சிட்டா என்பது.. பட்டாவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் சேர்த்துக் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும். ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவு என்ன? அந்த நிலத்துக்கு யார் சொந்தக்காரர்? நஞ்சை நிலமா? புஞ்சை நிலமா? வறண்ட நிலமா? ஈர நிலமா? நிலம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, பயன்பாட்டில் உள்ளதா, தீர்வை விவரங்கள் போன்றவை அடங்கிய ஆவணத்தையே சிட்டா என்பார்கள்..

அதேபோல, ஒரு நிலத்தின் பரப்பளவு பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்கள் அடங்கியதே அடங்கல் என்பதாகும். இந்த ஆவணத்தையும் வருவாய்த்துறையே வழங்குகிறது.

நில ஆவணம்: அதேபோல, ஒரு கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு வருடமும், தன்னுடைய கிராமத்திலுள்ள ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்தையும் பதிவு செய்ய வேண்டும்... ஒவ்வொரு நிலத்திலும் வீடு இருக்கிறதா? கிணறு உள்ளதா? நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கிறதா? என்ன வகை பயிர்? தோப்பு உள்ளதா? கோயில் உள்ளதா? போன்ற விவரங்களை பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். அந்த ஆவணத்தின் பெயர்தான் அடங்கல் என்பார்கள்.

இந்நிலையில், நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை நீங்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கான பிரத்யேக இணையதள சேவைகளை தமிழக அரசு சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டிருந்தது.

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கும் செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக அரசு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டிருந்தது.
அறிவிப்பு: "கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காகாணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக் கோருவதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிசிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சேவைகள்: இதில் 1 மற்றும் 2-ல் உள்ள சேவைகளை தங்கள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டாக்களை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கும் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்திருப்பதையடுத்து, பொதுமக்களிடம் இந்த திட்டம் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..

வரவேற்புகள்: காரணம், முன்பெல்லாம் இதுபோன்ற ஆவணங்கள் தேவையானால், நேரடியாகவே அரசு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.. இதற்கான விண்ணப்பங்களை எழுதித்தர வேண்டும்.. பிறகு, அதிகாரிகள் குறிப்பிடும் நாளில் நேரில் செல்ல வேண்டும்.. இதற்காக லீவு போட்டுவிட்டு நேரில் செல்ல நேரிடும்..

இதனால் பொதுமக்களுக்கு பணமும், கால நேரமும், அதிகாக வீணாகி கொண்டிருந்த நிலையில், இப்போது எல்லாமே ஆன்லைன்மயமாகிவிட்டது. ஆவணங்களும் வெப்சைட்களில் பதியப்பட்டுள்ளதால், சில நிமிடங்களிலேயே பணிகளும் முடிவடைந்துவிடுகின்றன. இதற்காக புரோக்கர்கள், லஞ்சம் கொடுப்பது போன்ற செயல்பாடுகளும் குறைந்திருக்கிறதாம்.

இலவச பட்டா: இப்படிப்பட்ட சூழலில், வருவாய் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது... இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட விளக்கமாக பட்டியலிட்டு ஒரு செய்திக்குறிப்பினையும் வெளியிட்டிருக்கிறது. அதில் பத்திரப்பதிவு குறித்தும் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

குறிப்பாக, "தமிழகத்தில் மொத்தமுள்ள 186 நகரங்களில் 179 நகரங்களுக்கான புலப்படங்கள், ஆன்லைன்மயமாக்கப்பட்டு, வெப்சைட்களில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 7 நகரத்துக்கான புலப்படங்கள் வெப்சைட்டில் ஏற்றும் பணி நடந்துவருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெருமிதம்: அதேபோல, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவர் 2 ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி, மனைகளாகப் பிரித்திருந்தால் மனை விற்பனை பதிவின்போது பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. நில அளவை போன்ற அனைத்து பணிகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன" என்று அரசு பெருமிதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+