Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்டு மாதிரி 4 சீட்.. அந்த 2 கட்சியை சூப்பராக தட்டி தூக்கும் எடப்பாடி பழனிசாமி? கோட்டை விட்டதா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்து வருகின்றன.. அந்தவகையில் விரைவில், கூட்டணி தொடர்பாக நல்ல செய்தி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாக போகிறதாம்.

திமுகவுக்கு மாற்றான இதே போன்ற பலமான கூட்டணியை அதிமுகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாஜகவையும் சமாளித்து, மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

Fantastic Decision by AIADMK Edappadi Palanisamy and dmdk PMK Alliance agreement likely to be signed soon

ஆனால், சிறுபான்மை ஓட்டுக்களை மையப்படுத்தி, பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்து கொண்டதில் இருந்தே, அதிமுகவுக்கான ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு வராமலும் இருந்து வந்தது.. முக்கியமாக, கூட்டணியில் பின்னடைவு தென்பட்டது. யாருமே கூட்டணி வைப்பதாக அறிவிக்கவும் இல்லை.
2 கட்சிகள்: பாமக, தேமுதிக 2 கட்சிகளுமே ராஜ்யசபா சீட் கேட்டு வந்ததால், அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தன.. எனினும், பாமகவுக்கு 7, தேமுதிகவுக்கு 3 சீட்டுகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக தெரிகிறது.. ஆனால், ராஜ்யசபா சீட் 2 பேருக்குமே கிடையாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டதாம்.

அதுமட்டுமல்ல, பாமக, தேமுதிகவுக்கு திமுகவிலும் கூட்டணி கதவு அடைக்கப்பட்டுவிட்டதால், அதிமுக கூட்டணிக்கு மட்டுமே அவர்கள் வந்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுது.. அதனால்தான் ஒருகட்டத்தில், பாமக, தேமுதிகவின் இழுப்பிற்கு செல்ல வேண்டாம் என்ற முடிவுக்கே அதிமுக வந்ததாம்.

ஓபன் டாக்: இப்படிப்பட், சூழலில், பாமக, தேமுதிகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் முடிந்து, நேரடி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..

ஏற்கனவே இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்ட நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற போவதாக கூறப்படுகிறது. அந்தவகையில், நாளைய தினம், தேமுதிக, பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

கூடுதல் சீட்: தேமுதிகவுக்கு ஆரம்பத்தில், 3 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு செய்திருந்த நிலையில், தற்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாம். அந்தவகையில், கிருஷ்ணகிரி, விருதுநகர், கடலூர், திருச்சியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாம்..
இதில், கள்ளக்குறிச்சியில் சுதீஷை நிறுத்த வேண்டும் என்று கடந்த வருடத்திலிருந்தே ஒரு பேச்சு எழுந்தது.. காரணம் கள்ளக்குறிச்சியில், மற்ற கட்சிகளை போல தேமுதிகவுக்கும், ஓரளவு வாக்கு வங்கி இருப்பதாலும், ஏற்கனவே சுதீஷ் இங்கு போட்டியிட்ட தொகுதி என்பதாலும், இந்த முறையும் இதே தொகுதி ஒதுக்கப்படலாம் என்றார்கள்.

விருதுநகர்: பிறகு, விருதுநகர் தொகுதியில் சுதீஷ் களமிறங்கலாம் என்றார்கள். ஆனால், இந்த தேர்தலில், உடல்நிலை காரணமாக சுதீஷ் போட்டியிட வாய்ப்பு குறைவு என்கிறார்கள். அதற்கு பதிலாக, எம்பி சீட்டை பிறகு கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளதாம். மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் ஏதாவது இரண்டினை ஒதுக்குமாறு தேமுதிக கேட்கிறதாம்.

ஆனால், பாமகவும் இதே தொகுதிகளை கேட்டு வருகிறதாம்.. பாமகவும், தேமுதிகவும் வட மாவட்டங்களில் 2 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துள்ளது..

சுமூக முடிவு: பாமக, தேமுதிக 2 கட்சிகளுமே தற்போது கூட்டணிக்கு இறங்கி வந்தாலும்கூட, தொகுதி விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதால், மறுபடியும் அதிமுகவுக்கு சிக்கல் வந்துள்ளது.. இதில் யாருக்கு எந்த தொகுதியை தருவது என்ற பஞ்சாயத்தும் ஓடிக் கொண்டிருக்கிறதாம். எப்படிபார்த்தாலும், நாளைய தினம், கூட்டணி தொடர்பாக ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என்றே நம்பப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+