எல்ஐசியின் கன்யாதான் சேமிப்பு திட்டம்.. ரூ.75 கட்டினால் ரூ.14 லட்சம்! பெண் குழந்தைகளுக்கு செம பாலிசி
சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, வரப்பிரசாதமாக அமைந்துள்ள எல்ஐசியின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு? இதன் பலன்கள் என்னென்ன?
எத்தனையோ தனியார் நிறுவனங்கள் காப்பீடு தந்துவருகின்றன.. ஆனால், பல்லாண்டு காலமாக பொதுமக்களால் அதிகம் விரும்பப்படுவது, அதிகம் நம்பப்படுவது, எல்ஐசி தரும் திட்டங்களைதான்.

நன்மைகள்: அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீடுகளை வழங்கி வருகிறது... எனவேதான், நம்முடைய நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசியில் முதலீடு செய்துள்ளதுடன், காப்பீடு செய்திருப்பதும் இதே எல்ஐசியில் தான்.. அந்தவகையில் பல பல திட்டங்களுக்கு புதுபுது சலுகைகளை அறிவித்து வருகிறது.
இதில் பலராலும் விருப்பப்படும் பாலிசி, எல்ஐசியின் கன்யாதான் பாலிசி ஆகும்.. பெண் குழந்தைகளின் நலனுக்கானது இந்த பாலிசி.. அவர்களது எதிர்கால கவலையை பெற்றோர்கள், எளிதில் பூர்த்தி செய்யவே இந்த பாலிசி உள்ளது.. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதியுதவியை தரக்கூடிய திட்டம் இதுவாகும்.
கன்யாதான்: எல்ஐசியின் கன்யாதான் பாலிசியின் கீழ், உங்கள் பெண் குழந்தைகளின் கல்வி அல்லது திருமண செலவுகளுக்கு உதவியை பெறலாம்.. இதற்கு நீங்கள் தினமும் வெறும் ரூ. 75 மட்டுமே முதலீடு செய்தாலே போதும், வலுவான வருமானத்தை நீங்கள் பெறலாம். இந்த பாலிசியில் முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ. 14 லட்சம் கிடைக்கும்.
தகுதிகள் என்னென்ன? குழந்தையின் தந்தையின் வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். பெண் குழந்தையின் குறைந்தபட்ச வயது 1 வருடமாக இருக்க வேண்டும். எந்தவொரு நபரும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திற்கு இதில் காப்பீடு பெறலாம். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.
இந்த திட்டத்தின் பாலிசி காலம் 13 வருடம் முதல் 25 வருடமாகும்.. பிரீமியம் செலுத்தும் காலம் 3 வருடங்கள் வரை உள்ளது.. பிரீமியம் செலுத்தும் விருப்பங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் உள்ளது..
முதிர்வு நேரம்: நீங்கள் 25 வருட கால திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், 22 வருடங்களுக்கான பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் 25 வருடங்களுக்கு பிறகு முதிர்ச்சியடையும். முதிர்வு நேரத்தில், முழுத்தொகையும் காப்பீட்டுத் தொகையும், போனஸும், இறுதி போனஸுடன் செலுத்தப்படும்...
பாலிசியை வாங்கிய 3ம் ஆண்டிலிருந்து கடன் வசதியும் கிடைக்கும். 2 வருடங்கள் முடிந்த பிறகு பாலிசியை சரண்டர் செய்யலாம்.. அதேபோல, பிரீமியம் செலுத்துவதற்கான சலுகை காலமும் தரப்படுகிறது.. பாலிசி பிரீமியத்தை ஒரு மாதத்தில் செலுத்த தவறிவிட்டால், 30 நாட்களுக்குள் அந்த பிரீமியத்தை செலுத்தலாம். இதற்கென தாமத கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
காப்பீடு திட்டம்: அதுமட்டுமல்ல, காப்பீடு செய்த பெற்றோருக்கு விபத்து மூலம் மரணம் ஏற்பட்டால் உடனடியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்... இயற்கை மரணம் ஏற்பட்டால், ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.
முதிர்வு தேதி வரை ஒவ்வொரு வருடமும் ரூ.50,000 வழங்கப்படுகிறது. பாலிசி காலத்தின் போது தந்தை இறந்துவிட்டால், அடுத்த காலத்திற்கு குழந்தை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: கன்யாதான் பாலிசியை எடுக்க, பெண்ணின் தந்தையின் வயது குறைந்தது 18 வயதும் அதிகபட்சம் 50 வயதும் இருக்க வேண்டும்.எல்ஐசியின் கன்யாதான் பாலிசியை எடுக்க வேண்டுமானால், ஆதார் அட்டை, முகவரி ஆதாரம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், மகளின் பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். பாலிசி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://lifeinsuranceofindia.in/lic-kanyadan-policy/












Click it and Unblock the Notifications