Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இவர்"தான் பிரதமர் வேட்பாளரா? தேசம் முழுதும் கவனிக்கப்படும் ஸ்டாலின்.. "மேடம்" வேற சொல்லிட்டாங்களாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த, ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தொய்வில் கிடந்தது பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி.. உட்கட்சி பூசல் உள்ளிட்ட விவகாரங்களினால், தொண்டர்கள் சோர்ந்து போய் கிடந்தனர். ஒருபக்கம் பூசல்கள், மறுபக்கம் பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சி என 2 விதமான நெருக்கடிக்குள் கதர் தொண்டர்கள் சுணங்கி போனார்கள்.

 Fantastic Move by Congress and will Tamil Nadu CM MK stalin announce Rahul Gandhi as pm candidate


நடைபயணம்: இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுல்காந்தியின் எழுச்சி மிகு நடைபயணம் ஆரம்பமானது.. இந்தியா முழுவதும் புத்வேகத்தை இந்த நடைபயணம் ஏற்படுத்தியது.. நொந்துபோய் கிடந்த தொண்டர்கள், ராகுலின் அதிரடியை கண்டு மகிழ்ந்து போனார்கள்.. எளிய மக்களிடம் ராகுல் காட்டிய நெருக்கமும், அன்பும் பெருத்த நம்பிக்கையை காங்கிரசுக்கு ஏற்படுத்திவிட்டது. இதன் பலனை கர்நாடக தேர்தலும் அறுவடை செய்ய நேர்ந்தது.

அதனால்தான், "ராகுல் நடைபயணம் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளது" என்று ஏற்கனவே நம்முடைய முதல்வர் ஸ்டாலின் பாராட்டுப்பத்திரம் வழங்கியிருந்தார்.. ஆனால், பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று அப்போதே கதர் தலைவர்கள் எதிர்பார்த்தார்களாம்.

காங்கிரஸ் மேலிடம்: ஆனால், காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும் என்பதற்காகவே, ஆளுநர் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்பட்டு வந்ததால், ராகுல் விவகாரத்தை தற்சமயத்துக்கு தள்ளி வைத்திருந்ததாம் முதல்வர் தரப்பு. அதுமட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்பதை ஏற்கனவே ஸ்டாலின் வெளிப்படையாகவே சொல்லி உள்ளதால், திமுகவின் நிலைப்பாட்டை காங்கிரஸ் மேலிடமும் நன்கறியும்.

இந்நிலையில்தான் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.. அதாவது, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், சல்மான்குர்ஜித், அஜோய்குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் தேசிய அரசியல் குறித்து விவாதித்திருக்கிறார்கள்..

திமுக கூட்டணி: அப்போது தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் சிலரும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. இந்தியா கூட்டணியில் நிலவும் பிரச்சனைகள், தென்னிந்திய மாநில பிரச்சனைகள் என தேர்தல் அரசியல் குறித்த பல விஷயங்களையும் தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் பேசியுள்ளனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான இடப்பிரச்சனை குறித்தும் பேச்சு எழுந்துள்ளது.

அப்போது, "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலினிடம் மேடம் (சோனியா காந்தி ) சொல்லியிருக்கிறார். ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக பிரகடனப்படுத்தினால் சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளவும் நாம் தயார் தான்" என்று கே.சி.வேணுகோபால் சொன்னாராம். இதைக்கேட்டதுமே, காங்கிரஸ் எம்பிக்களை அதிர்ந்து போனார்களாம்.

இதுதான் காரணம்: காரணம், சீட் குறைக்கப்பட்டால் நமக்கு தொகுதி கிடைக்காமல் போனால் என்ன செய்வது? என்கிற பதட்டம் தான் அதிர்ச்சிக்கு காரணமாம். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசிய எம்பி ஒருவர், "ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்னு திமுக அறிவித்தால், ராகுல் காந்தி பாண்டிச்சேரியில் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தமிழகம் முழுவதும் அந்த அலை வீசும்" என்றாராம்.

ஆக, சோனியாவின் கோரிக்கையை திமுக நிறைவேற்றுமா? ராகுலை பிரதமராக ஸ்டாலின் அறிவிப்பாரா? ராகுல் புதுச்சேரியில் போட்டியிடுவாரா? திமுகவின் நிலைப்பாடு என்ன? என்கிற எதிர்பார்ப்பெல்லாம் காங்கிரசில் அதிகரித்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+