பைக், டூவீலர், கார்.. புதிய மோட்டார் வாகன சட்டம்.. "இவங்க" டூவீலரை தொட்டாலே.. பதிவு சான்று ரத்து
சென்னை: சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது..
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சாலை விபத்துகளில் அநியாயமாக உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு: சமீபத்தில், தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது.
அந்தவகையில், அதிகபட்சமாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 90,663 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளதாம்.. அதனால், இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் கவனமாக, எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், மத்திய அரசு கேட்டுக கொண்டிருந்தது.
2 நாட்களுக்கு முன்புகூட நம்முடைய நம்முடைய சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது.
சாலைவிபத்துகளில் சிறுவர்கள் பலரும் சிக்கிவிடுவதாலேயே இப்படியான அறிவுறுத்தல்கள் தரப்பட்டு வருகின்றன. எனினும், 18 வயதுக்கு குறைந்த மைனர்கள், டூ வீலர்களை ஓட்டுவதால் அதிக விபத்துகள் நடந்தபடியே உள்ளன..
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது யாரேனும் இயக்கினால் மட்டுமே வாகன உரிமையாளர்களிடடம் இருந்து இழப்பீடு பெற முடியும் என்ற மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ திருத்தம் செய்ததையடுத்து தமிழகத்தில் 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒரு வருடம் : அதுமட்டுமல்லாமல், சிறுவர்கள் கார், பைக் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.. அதுதுடன், வாகனத்தின் பதிவு சான்று (ஆர்.சி) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் வாகனத்தை ஒரு வருடத்துக்கு ஓட்ட முடியாமல் போய்விடும்.. இந்த சட்டம் இப்போது அமலில் உள்ளது.
இதனிடையே, காரைக்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டு சமீபத்தில் சிறுவன் ஓட்டிய பைக்கின், பதிவு சான்றிதழை 12 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யவும், சிறுவனுக்கு ரூ.26ஆயிரம் அபராதம் விதிக்கவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
பெற்றோர்: சிறுவனின் பெற்றோர் அபராதம் செலுத்திய நிலையில் பைக்கை அந்த சிறுவனால் ஒரு வருடமாகஓட்ட முடியாமல் போனது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றமே என்றாலும், அதை மீறுபவர்கள் பொதுவாக அபராத்துடன் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இனிமேல் அப்படி கிடையாது.. அபராதத்துடன் வாகனத்தை இயக்குவதற்கு தடையும் விதிக்கப்படுகிறதாம்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. இதே அதிரடியை பல மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications