Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டோட்டலா" மாறுது போலயே.. "தூண்டிலை" மாற்றி வீசிய எடப்பாடி.. 2 பிரம்மாஸ்திரத்தை எடுத்து பாஜக ஓவர்டேக்

எடப்பாடி பழனிசாமி சொன்ன மெகா கூட்டணி குறித்து கருத்துக்கள் எழுந்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிட்டு, பாஜக தனித்து கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. அதற்கேற்றவாறு தமிழக பாஜக 2 விதமான மாஸ் பிளான்களை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா? அல்லது பாஜகவை தவிர்த்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணியை யாருடன் அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக அமைப்பு செயலாளரும், தென்சென்னை வடக்குகிழக்கு செயலாளர் ஆதிராஜாராம் நம் ஒன் இந்தியா சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

 ஆதி ராஜாராம்

ஆதி ராஜாராம்

அந்த பேட்டியில் பாஜகவுக்கு, எடப்பாடி பணிந்து செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.. நம்மிடம் ஆதி ராஜாராம் பேசும்போது, பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம்.. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், கூட்டணியில் உள்ளதாலும் அமித்ஷாவை சென்று வரவேற்றோம்.. சூழ்நிலை காலமாக, எடப்பாடி பக்கத்தில் ஓபிஎஸ் அன்று நின்றுவிட்டார். சபை நாகரீகம் கருதி, எடப்பாடியும், நகர முடியாமல் அங்கேயே பக்கத்தில் நின்றுவிட்டார்..

 கண்ணோட்டம்

கண்ணோட்டம்

ஆனால், 2 பேரும் ஒன்றாக இருந்து செயல்படுங்க என்று பிரதமர் சொன்னமாதிரி தகவல்கள் பரப்பப்பட்டன.. அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.. 2 பேரையும் ஒன்றாக நிற்க வைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் எங்கள் கட்சி தொண்டர்களிடம் உள்ளது.. மோடியை எதிர்ப்பதாக இருந்தால், தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும், அதிமுகவுக்கு என்ன நடக்கும் என்பது எடப்பாடிக்கு நல்லாவே தெரியும் என்று டிடிவி தினகரன் கருத்து சொல்லி உள்ளார்.. ஆனால், இரட்டை இலை கேஸில் யார் தயவில் இவர் எப்படி வந்தார் என்பது எல்லாருக்குமே தெரியும்.. அதே கண்ணோட்டத்தில்தான் இந்த விஷயத்தையும் தினகரன் பேசுகிறார்..

 420 ஓபன்

420 ஓபன்

இதே ஓபிஎஸ், தன்னுடைய பல பேட்டிகளில் தினகரன் 420 என்றே ஓபனாக சொல்லி உள்ளார்.. அதேசமயம், பாஜகவுக்கு இணங்கி சென்றோம் என்பதை ஏற்க முடியாது.. அப்படியானால், கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தினகரனுக்கு சீட் கொடுத்திருப்போமே.. சசிகலாவுக்கும் சீட் தந்திருப்போமே.. எங்களை அன்றும், இன்றும் யாருமே நிர்ப்பந்தப்படுத்தவில்லை, நிர்ப்பந்தப்படுத்தவும் முடியாது.. அவர்களை இணைத்துக் கொள்ளும்படி, பாஜக தரப்பில் கருத்து மட்டுமே சொன்னார்கள்.. அதை நாங்கள் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டோம்.. அவ்வளவுதான்.. தற்போது அதுமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட எங்களை பாஜக நிர்ப்பந்தப்படுத்த முடியாது என்றார்.

டேமேஜ்

டேமேஜ்

இப்படி பல்வேறு கருத்துக்கள், எடப்பாடி + பாஜக கூட்டணி குறித்து வெடித்து வெளிவரும் நிலையில், எடப்பாடி தனியாக கூட்டணி வைப்பாரோ? அல்லது எடப்பாடியை கழட்டிவிட்டு பாஜக கூட்டணி வைக்குமோ என்ற யூகங்கள் வெடித்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், பாஜக தனித்து நிற்கும் அளவுக்கு தன்னை பலப்படுத்தி கொள்ளவும் முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக, திமுக மட்டுமே பிரதான குறி என்பதால், அக்கட்சியை டேமேஜ் செய்து, அதன்மூலம் பாஜகவின் பலத்தை பெருக்கி கொள்ளவும் வியூகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாம்.

 ப்ளான் 1

ப்ளான் 1

முதலாவதாக, ஆர்ப்பாட்டம், போராட்டங்களை திமுக அரசுக்கு எதிராக உடனுக்குடன் எடுக்க போகிறார்களாம்... ஏற்கனவே அதிமுகவைவிட, திமுகவுக்கு எதிராக பாஜக அதிக போராட்டங்களை செய்து வரும் நிலையில், இது தற்போது வேகம் எடுத்துள்ளது.. அதனால்தான், கால்பந்து வீராங்கனை பிரியா இறந்தபோதுகூட அன்றைய தினமே, கவனக்குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, கண்டனம் தெரிவித்திருந்தார்.. மற்ற துறைகளை போல, சுகாதாரத்துறையும் சீரழிந்துவிட்டதாக பதிவும் செய்திருந்தனர். இந்த விஷயத்திலும் அதிமுகவை முந்திக்கொண்டு, பாஜக ரியாக்ட் செய்திருந்தது.

 ப்ளான் 2

ப்ளான் 2

இரண்டாவதாக, மத்திய பாஜகவின் திட்டங்கள், தகுதி இருந்தும் தமிழக மக்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டையும், அரசு மீது தமிழக பாஜக முன்வைத்து வருவதால், அதுகுறித்தும் அடுத்த யோசனையை தீட்டி உள்ளதாம்.. எனவே, இத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், அதேசமயம், பட்டியலின சகோதர சகோதரிகளின் வீடுகளில் சாப்பிடுவது, பிறகு அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்து வயிறார சாப்பிட வைப்பது என நிறைய பிளான்களை வைத்திருக்கிறார்களாம்.. இதன்மூலம் அடித்தட்டு மக்களிடமும் கால் ஊன்ற முடியும் என்றும் பாஜக நினைக்கிறதாம்.

கமலாலயம்

கமலாலயம்

இதைதவிர, இன்னொரு முடிவையும் யோசித்து வருகிறதாம்.. ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் 2 பேரை மட்டும் குறிவைத்து வரும்நிலையில், வேறு 3 முக்கிய அமைச்சர்கள் குறித்த புகார்களை, வழக்குகளை தூசி தட்டி எடுக்க போகிறதாம்.. இதற்கான ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களுடன் சேகரித்து, இதன்மூலமாகவும் திமுக தரப்புக்கு நெருக்கடி கொடுக்க போவதாக வியூகங்கள் எடுக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்து வருகின்றன..!

 டைம் ஓவர்

டைம் ஓவர்

இப்படி, திமுகவுக்கு எதிராக பல அதிரடிகளை பாஜக கையில் எடுக்க போவதாக சொல்லப்பட்டாலும், மற்றொருபக்கம் எடப்பாடியுடன் உறவை அவ்வளவு சீக்கிரம் முறித்து கொள்ளாது என்கிறார்கள்.. திமுக என்பது வெளிப்படையான எதிரி என்றால், அதிமுக என்பது மறைமுகமான எதிரியாக பாஜக கருதுவதாகவும் இன்னொரு சாரார் கருத்து சொல்கிறார்கள்.. தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருந்தாலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் சலசலப்புகளும், யூகங்களும், முரண்பாடுகளும், இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+