லட்சாதிபதி ஆகணுமா? ஆடு வளர்த்தே சம்பாதிக்கலாம்.. அள்ள அள்ள லாபம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்
சென்னை: ஆடுகள் வளர்ப்பதில், கால்நடை விவசாயிகளுக்கு மத்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது.. எப்படி தெரியுமா?
விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் கால்நடை விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தவும் பல உதவிகளை செய்து வருகிறது.

விவசாயிகள் உட்பட பலரும் கூடுதல் லாபத்துக்காக ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.. ஒரு கிலோ ஆட்டுக்கறி 1,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதால், ஆடுகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வங்கிகள்: அதனால்தான், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஆடு வளர்ப்புக்கான திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஆடு வளர்ப்பில் ஈடுபட விருப்பமுள்ள நபர்களுக்கு எளிமையாக நிதி உதவி அளிக்கப்பட்டும் வருகிறது. குறிப்பாக நிலமற்ற விவசாயிகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது... எனவே, பாஷூ கிஸான் கிரெடிட் கார்டினை நீங்கள் வைத்திருந்தால், இதில் கூடுதல் சலுகையை பெறலாம்.
வறுமைக்கோடு: சிறு, குறு விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என இத்தரப்பு மக்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். ஆடு வளர்க்கும் தொழிலுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நபார்டு வங்கி, முத்ரா வங்கி மற்றும் ஐடிபிஐ போன்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மிக எளிதாகக் கடன் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் குமார் அகர்வால் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.அந்த பேட்டியில் ஆடு வளர்க்கும் திட்டத்தின்கீழ் பெறும் மானியம் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்.
மானியம்: அதில், "விவசாயிகள் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை இந்த திட்டத்தின் கீழ் வளர்க்கலாம். இதில் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும். 100 ஆடுகளை வளர்ப்பதற்கு ரூ.20 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 2 முறை தலா ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
200 ஆடுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு ரூ.40 லட்சமும், 300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சமும், 400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ரூ.1 கோடி திட்டமும் உள்ளது. இவை அனைத்திற்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும்..
தள்ளுபடி: ரூ.20 லட்சம் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பங்காக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். பிறகு வங்கியிலிருந்து ரூ.8 லட்சம் கடனாகப் பெற வேண்டும். இதில் 25 சதவீதம் தொகையை விவசாயி செலவழித்த பிறகு, தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டம் முடிவடைந்தும், 2வது தவணையாக ரூ.5 லட்சம் தள்ளுபடி தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் முழு பலன்களைப் பெற வேண்டுமானால், விவசாயத் துறையின் உத்யம் மித்ரா வெப்சைட்டிற்கு சென்று ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: ஆனால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஆடு வளர்ப்புப் பயிற்சி கட்டாயம் பெற வேண்டும்.. மேலும், விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். இந்த நிலத்தின் மீது எந்தவிதமான கடன்களும் இருக்கக்கூடாது. விவசாயிகளின் நிலத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு இயங்கினாலும், இந்த திட்டத்தின் பயன்களை பெற முடியாது. விவசாயிக்கு சொந்த நிலம் இல்லையென்றால், 10 ஆண்டுகளுக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ஆடுகளை வளர்க்கலாம்.
இதற்கு தகுதியானவர்களை, கால்நடை துறையை சேர்ந்த குழுவானது, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு பூர்த்தி செய்த படிவம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு வங்கி நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிக்குக் கடன் வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications