வாசலில் வந்த பறவை.. கண்ணே திறக்கல.. கிட்ட போய் பார்த்த நபர்.. இணையத்தை சிலிர்க்க வைத்த கருணை.. சபாஷ்
சென்னை: இணையத்தில் பறவை வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாகி கொண்டிருக்கிறது. வீடியோ ஷேர் செய்த சிறிது நேரத்திலேயே கிட்டத்தட்ட 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றிருக்கிறது.. மேலும் பலர் ஷேர் செய்தும் வருகிறார்கள்.
சோஷியல் மீடியாக்களில் தினந்தோறும் ஏகப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், மனிதாபிமானம் மிக்க வீடியோவாக வெளிவந்து, இணையவாசிகளின் பாராட்டை பெற்று வருகிறது.

இதில் பச்சைக்கிளிகளை காப்பாற்றும் மனிதநேய செயல்கள் சமீப காலமாகவே அதிகரித்து கொண்டிருக்கிறது. 4 மாதங்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த பச்சைக்கிளிக்குத் தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றியிருந்தார் ஒரு போலீஸ்காரர்.
வெயில் தாக்கம்: தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கிவந்தபோது, நெல்லையில் சராசரியாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகியது. அப்போது, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திடீரென ஒரு பச்சைக்கிளி ஒன்று மயங்கி விழுந்தது. அதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் அதனைத் தூக்கி வந்து, அங்குள்ள குடிநீர் தொட்டியில் கிளியை நனைத்தார். பிறகு, மயக்கத்தில் இருந்த கிளி, தண்ணீரை குடித்தது..
உடனே போலீஸ்காரர் சாப்பிடுவதற்கு பொரிகடலை தந்தார்.. அந்த கிளி பொரிகடலை சாப்பிட்டுவிடடு பறந்தது.. இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களும், சக போலீஸ்காரர்களும் பாலசுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.
வீடியோ : இதுபோல தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இன்னொரு பறவை வீடியோ மக்களை கவர்ந்து வருகிறது.. ஒரு பறவை வாசல் ஒன்றில், தரையில் விழுந்து கிடக்கிறது.. அதற்கு சுயநினைவு இல்லை.. அதைப்பார்த்த நபர் ஒருவர், சிறிய கப்பில் தண்ணீர் கொண்டுவந்து, மயங்கிய நிலையில் கிடந்த பறவையின் வாயில் ஊற்றுகிறார்.
தண்ணீர் வாயில் பட்டவுடனேயே அந்த பறவை, சட்டென்று இறக்கைகளை அசைத்து எழுந்து நிற்கிறது.. பிறகு, அந்த நபர், தன்னுடைய கையிலுள்ள தண்ணீர் கப்பை பறவையின் வாயருகில் கொண்டு செல்லவும், அந்த பறவையும் தனக்கு தேவையான தண்ணீரை குடிக்கிறது... பின்னர், அந்த நபர், பறவையின் தலையை வருடி தருகிறார்..
பறவை பறந்தது: பின்பு, மெல்ல அந்த சின்ன பறவையை தன்னுடைய கையில் வைத்து கொண்டு, சிறிது தூரம் நடந்து சென்று, வானில் மெல்ல பறக்கவிடுகிறார்.. அந்த பறவையும் தெம்புடன் றெக்கையை விரித்து பறக்கிறது.
இந்த நிகழ்ச்சி எங்கே நடந்தது என்று தெரியவில்லை.. பறவை ஏன் மயங்கி கிடந்தது என்றும் தெரியவில்லை.. ஆனால், முகம் தெரியாத அந்த நபரின் மனிதாபிமானம் மட்டும், பலரால் பாராட்டப் பெற்று வருகிறது.
சபாஷ்: "தாகத்தில் இருக்கும் ஒரு விலங்குக்கு செய்யப்பட்ட உதவி" என்ற கேஷ்பனுடன் இந்த வீடியோ இன்ஸ்டாவில் வலம் வருகிறது. கிட்டத்தட்ட 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 21,7000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications