Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ்.. பயிர் கடனுக்கு பழைய நடைமுறையை பின்பற்றப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பழைய நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

old-procedure-will-be-followed-for-agricultural-loans-tamil-nadu-government-announcement

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும், கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய நடைமுறையின்படி சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பழைய நடைமுறையை பின்பற்ற தற்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இருப்பினும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி, பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குவதில் இடர்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே நடப்பு ஆண்டிலும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+