13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை
சென்னை: 13 வயதே ஆன சிறுமியை 6 சிறார்கள் உள்பட 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, சிறுமியின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.
செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற வசதிகள் இல்லாத காரணத்தால், வழக்கின் விசாரணையை சென்னைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதி எம். நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு குறித்த விவரம் வருமாறு:
அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர் தீபிகா முரளி முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதால் வழக்கின் கூடுதல் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும், மனுதாரருமான அந்த நபர், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு வேலை செய்து வந்த சிறுமியின் தந்தை, தனது மனைவி மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவன் ஒருவன், 2024 ஆகஸ்ட் மாதத்தில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளான். அதன்பிறகு 2024 அக்டோபர் மாதத்தில், அந்த சிறுவன், தனது நண்பர்களுடன் மீண்டும் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
சிறுமிக்கு குழந்தை பிறந்தது
2024 நவம்பர் மாதத்தில், அந்த 6 சிறுவர்களும் மற்ற மேலும் சில வயது வந்த நபர்களும் இணைந்து சிறுமியை மீண்டும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர். அந்தச் சம்பவமும் அவர்களது மொபைல் போன்களில் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 15 பேர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 6 பேர் சிறார்கள். ஏனையவர்கள் வயது வந்த நபர்கள் ஆவர்.
2025ஆம் ஆண்டு மே மாதம் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்த போதுதான் இந்த சிறுமிக்கு நடந்த கொடூரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போது மே 13, 2025 அன்று நீதிபதி வி. லக்சுமி நாராயணன் சிறுமியின் கருவை கலைக்க உத்தரவிட்டார். எனினும், மே 15ஆம் தேதிக்கு சிறுமிக்கு குழந்தை பிறந்தது. 2 தினங்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது.
விசாரணை இன்னும் தொடங்கவில்லை
தமிழகத்தையே உலுக்கிய இந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஐஜி அஸ்ரா கர்க் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்ற நிலையில், இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் குற்றப்பத்திரிகை 9 இளைஞர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இரண்டாவது குற்றப்பத்திரிகை 6 சிறார்களுக்கு எதிராகவும் செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஜூலை 06, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சிறார் குற்றவாளிகள் 16 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்களை சிறார்களாக கருதலாமா அல்லது வயது வந்த குற்றவாளியாக கருதலாமா என ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணை இன்னும் தொடங்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைக்கு மாற்ற கோரிக்கை
சிறுமி சென்னையில் படித்து வருவதாலும், இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தால் சிறுமியின் படிப்புக்கு இடையூறு ஏற்படாது என்றும், அதேபோல் இது சிறுமியின் முழுமையான நலனையும் பாதுகாக்க உதவும் என்றும், எந்தவித தேவையற்ற சிரமமும் இல்லாமல் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க அவளுக்கு வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் போக்சோ சட்டம் 23 முதல் 33 வரையிலான பிரிவுகளின்படி குழந்தைகளுக்கு ஏதுவான கட்டமைப்புகள் இல்லை எனவும், தற்போதைய கட்டமைப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறுவது அவருக்கு தேவையற்ற மன அழுத்தத்தையும் விரக்தி, அச்சத்தையும் கொடுக்கும் என்றும் வாதம் முன்வைத்தார்.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications