தமிழகத்திலேயே ஒரே குடும்பம் மட்டும்தான்.. திமுகவில் கெத்தாக வென்ற தந்தை - மகன்! திண்டுக்கல்லில் மாஸ்
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றுள்ளார். தமிழகத்திலேயே இரண்டு இடங்களில் மட்டும் தான் தந்தையும் மகனும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல்லில் ஐ பெரியசாமி - ஐபி செந்தில்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தில் இருந்து போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆத்தூரில் ஐ பெரியசாமியும், திண்டுக்கல்லில் ஐபி செந்தில்குமாரும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் எதிர்பாராத திருப்பத்தை கண்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழக அரசியலை நிர்ணயித்துவந்த திமுக - அதிமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

தற்போதைய நிலவரப்படி, தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் தனி பெரும் கட்சியாக முதலிடத்தில் உள்ளது. திமுக கூட்டணி 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வென்றுள்ளது.
ஸ்டாலின் தோல்வி
அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார். தமிழகத்திலேயே சென்னையிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் திமுகவில் தந்தை மகன்கள் போட்டியிட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் வெற்றி
அதாவது தந்தையும் அவர்களது வாரிசுகளும் களத்தில் இறங்கினர். சென்னையைப் பொறுத்தவரை கொளத்தூரில் ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூரில் ஐ பெரியசாமியும், பழனி எம்எல்ஏவாக இருந்த ஐபி செந்தில்குமார் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டார். தமிழகத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் களம் இறங்கியது சென்னை மற்றும் திண்டுக்கல்லில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை மகன்
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் எதிர்பாராத அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் வென்றுள்ளார். ஆனால் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட தந்தை மகன் என இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். ஆத்தூர் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஐ பெரியசாமி வென்றிருக்கிறார். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தந்தை மகன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐ பெரியசாமி செந்தில்குமார்
கடந்த தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐ பெரியசாமி வென்ற நிலையில் தற்போது ஆயிரக்கணக்கில் குறைந்துள்ளது. மேலும் திண்டுக்கல்லில் ஐபி செந்தில் குமார் எளிதாக வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்ட நிலையில் பெரும் போராட்டமாகவே இருந்தது. இறுதியில் சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தான் செந்தில்குமார் ஜெயித்தார். பணபலம், அரசியல் ஆதரவு, வாக்கு வங்கி, என பலமாக இருந்த போதும் ஐபி செந்தில் குமார் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆத்தூரிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஐ.பெரியசாமிக்கு கடைசி வரை பிரஷர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications