தந்தையர் தினம் 2020: அப்பாவிற்கும் சூரியனுக்கும் சம்பந்தம் இருக்கு - சில சுவாரஸ்யங்கள்
இன்று சர்வதேச தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஞாயிறு கிழமை தந்தைக்காரகன் சூரியனுக்கு உகந்த நாள். இந்த நாளில் இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. தந்தைக்கும் சூரியனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. கு
சென்னை: ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ தந்தைதான். தந்தை காரகன் சூரியன் நவ கிரகங்களின் ஹீரோ, தலைவன். அப்பா குடும்பத்தின் ஆணி வேர் அந்த ஆணி வேர் பலமாக இருந்தால்தான் குடும்பம் பலமாக இருக்கும். நவ கிரகங்களுக்கு தலைவராக இருந்து வழிகாட்டுபவர் சூரியன். சில தந்தையர்கள் தாயுமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அப்பாக்களுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரியனால் ஒருவருக்கு கிடைக்கும் ஆளுமையும் அப்பாவிற்கும் அந்த ஜாதகருக்கும் உள்ள பாசத்தையும் பார்க்கலாம்.
Recommended Video
சில பிள்ளைகளுக்கு அப்பா நல்ல தோழனாய் இருப்பார் சில குழந்தைகளுக்கும் அப்பாவிற்கும் பிடிக்கவே பிடிக்காது. அப்பா எது சொன்னாலும் பிள்ளைகள் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வார்கள். தந்தையர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் அப்பாவிற்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது தந்தை காரகனான சூரியன் உங்கள் ஜாதகத்தில் எங்கே எப்படி இருக்கிறார் என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
நவ கிரகங்களில் தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம் சூரியன். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் கொண்டவர்கள்.

சூரியனும் அப்பபாவும்
ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டுதான் ஒருவரின் அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

சூரியனும் அப்பாவின் ஆசியும்
சூரியன் ஆட்சி அதிகாரம், ஆளுமைத்திறன் போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகளில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அப்பாவின் ஆசியும் நட்பும் ஒருவருக்கு கிடைக்கவும் சூரியனின் அருள் அவசியம்.

எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்
தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார் என பார்க்கலாம். மேஷ லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் பெரிய பதவியை கொடுப்பார். ரிஷப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு மாபெரும் யோகம் கிடைக்கும்.

தலைமை பதவி கிடைக்கும்
கடக லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்க பேச்சாற்றலால் யோகம் வரும். சிம்ம லக்னம் அல்லது சிம்மாராசியில் பிறந்தவர்களுக்கு அதிகார ஆளுமை கிடைக்கும். விருச்சிக லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பதவியை தருவார் சூரியன்.
தனுசு லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு நல் பாக்ய யோகம் தருவார் சூரியன். மற்ற லக்னம் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம் கிடைக்கும்.

தந்தை காரகன் சூரியன்
மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். தன்னம்பிக்கையும்
ஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனின் நிலையை வைத்து அவரின் தந்தை மீது வைத்திருக்கும் பற்று, தந்தையின் நிலை ஆகியவற்றை அறியமுடியும்.

சூரியன் தரும் யோகங்கள்
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தையும் மகனும் மிகுந்த அறிவாளிகளாக திகழ்வர் என்றாலும் தந்தை எல்லாவிஷயங்களுக்கும் கணக்கு பார்க்கும் குணம் கொண்டிருப்பார். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் குருவுடன் சேர்க்கை பெற்று நின்றிருந்தால் ஜாதகரின் தந்தை உயர்ந்த குலத்தில் பிறந்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுவார்.

அரசாங்க வேலை தேடி வரும்
சூரியனும் சனியும் சேர்க்கை எந்த விதத்தில் அமைந்தாலும் தந்தை-மகன் இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு விரோதத்தோடுதான் இருப்பார்கள். அதே நேரத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால் அரசாங்க வேலை பெற்று சந்தோசத்தோடு இருப்பார்கள். சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் தந்தை சுயநலமாக இருப்பார்.

அப்பா மேல் பாசம் அதிகம்
சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார். பித்ரு காரகன் சூரியன் 6/8/12 மற்றும் பாதக சம்மந்தம் பெறாமல் ஆட்சி உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று விட்டால் ஜாதகரின் தந்தை செல்வாக்கு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து மிகுந்தவராகவும் ஜாதகரின் மேல் அளவு கடந்த பாசமுடையவராக இருப்பார்.

பரிகாரம் என்ன
ஜாதகத்தில் சூரியன் சரியில்லாமல் இருப்பவர்கள் வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து ஏழு சப்தமிக்கு கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும் இங்கு சென்று தரிசனம் செய்து வரலாம். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்க சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications