ஸ்டெர்ச்சரில் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்ற பாத்திமா பாபு.. திடீர்னு என்னாச்சு.. வைரலாகும் வீடியோ!
சென்னை: சிறுநீரக கற்கள் பிரச்சினையால் அதிகாலை 3 மணிக்கு மிகவும் வலி இருந்ததால் மருத்துவமனையில் சேர்ந்து அதற்கான அறுவை சிகிச்சையும் செய்து கொண்டதாக பாத்திமா பாபு விளக்கமளித்துள்ளார்.
பாத்திமா பாபு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் சில திரைப்படங்களிலும் நடித்தவர். தொலைக்காட்சி சீரியல்களிலும் கெஸ்ட் ரோல் செய்தவர்.
இவர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். அவர் கடந்த இரு வாரங்களாக வீட்டிலேயே இருந்து வந்தார்.

வீடியோ
இந்த நிலையில் அவருக்கு கடந்த 26 ஆம் தேதி சிறுநீரகத்தில் கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பாத்திமா பாபு ஒரு வீடியோவையும் போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தற்போது தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

40 நாட்கள்
மேலும் சில உடல்நிலை சார்ந்த டிப்ஸ்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் கடந்த மே 1 ஆம் தேதி எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. எனினும் வெறு்ம 5 நாட்களில் குணமாகிவிட்டேன். ஆனால் எனது கணவர் பாபு, குணமாக 40 நாட்கள் ஆனது.

சகோதரி
ஜூன் 22 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு எனக்கு பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி இருந்தது. நான் ஏதோ தசை பிடிப்பு என நினைத்தேன். ஆனால் அந்த வலி குறையவே இல்லை. அதிகாலை 3.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வரும் என சகோதரியை அழைத்தேன். அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

கற்கள்
அங்கு எனக்கு சிடி ஸ்கேன் உள்பட அனைத்து டெஸ்டுகளும் எடுக்கப்பட்டன. அப்போது எனக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும் அது சிறுநீர்க்குழாய்க்கு சென்றதாலும் எனக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் சொன்னார்கள். மேலும் கல்லின் அளவு 7.8 மி.மீ. ஆகும். எனவே அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்றினர்.

கற்கள்
நிறைய தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். உங்கள் உடலில் கற்கள் உருவாவதிலிருந்து பாதுகாக்கும் திறன் தண்ணீருக்கு இருக்கிறது. எனவே தினமும் 3.5 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என்றார்கள். நான் தினமும் தண்ணீர் குடிக்கிறேன். நீங்களும் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications