ஷாக்கடிக்கும் கட்டண உயர்வு! சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் குற்றச்சாட்டு.. மழுப்பும் நிர்வாகம்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சிக் கட்டணம் ரூ.100லிருந்து ரூ.25,000ஆக உயர்ந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமார் 166 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சாமானிய மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ஏபிஜே அப்துல்கலாம் என 6 குடியரசுத் தலைவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஏராளமான அரசு அதிகாரிகளையும் இந்த பல்கலை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில், 1.85 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

ஆனால் சமீப நாட்களாக இந்த பல்கலையின் நடவடிக்கைகள், அதன் இலக்கின் தடத்திலிருந்து விலகி நடக்கிறதோ? என்கிற கேள்வியை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த பல்கலையில் பயிலும் முனைவர் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சி கட்டணம் ரூ.100லிருந்து ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அமல்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முழு நேரம் பிஎச்டி படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு கட்டணம் ரூ.1,500ஆக இருந்தது. அவை தற்போது ரூ.25,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பகுதி நேரம் பிஎச்டி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.3,500ஆக இருந்தது தற்போது ரூ.35,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க தற்போது கூடுதலாக ரூ.25,000 செலுத்த வேண்டியுள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளை திருத்துவதற்கு வெளிநாட்டிற்கு அனுப்பியதில்லை என்றும் தற்போது வெளிநாட்டுக்கு அனுப்புவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பை மாற்ற முன்பு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெற்ற சிண்டி கேட் மற்றும் செனட் கூட்டத்தில் இதற்கான முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்திருக்கிறார். கட்டண உயர்வு குறித்து பரிசீலித்துதான் வருகிறோம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த பல்கலையில் நிதி நெருக்கடி இருக்கிறது. எனவே இதனை சமாளிக்கதான் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எப்படி இருந்தாலும் கல்வி என்பது சேவையாகதானே இருக்க முடியும்? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications