ஏரியில் மிதந்த சுடிதார் போட்ட இளம்பெண்.. கை, கால் கட்டப்பட்ட நிலையில்.. பெரும்பாக்கத்தில் பரபரப்பு
பெரும்பாக்கம் ஏரியில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: பெரும்பாக்கம் ஏரியில் இளம் பெண்ணின் சடலம் மிதந்தது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!
சென்னை பெரும்பாக்கம் ஏரியில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக பெரும்பாக்கம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்தனர்.. ஏரியில் தலை குப்புற உடல் கிடந்தது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் சடலத்தை மீட்டனர்.

அந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும்.. நீலம் மற்றும் பிங்க் கலரில் மல்சட்டையும், பிங்க் கலரில் சுடிதார் பேண்ட்டும் அணிந்திருந்தார். மூக்குத்தி அணிந்திருந்தார்.. இதைதவிர வேறு அடையாளம் எதுவும் தெரியவில்லை. பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும், அவர் அணிந்திருந்த உடை புதிதாக இருந்ததாக போலீசார் சொல்கிறார்கள்.
ஆனால் அவர் யார், எந்த ஊர் என விவரம் தெரியவில்லை. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் மிதந்ததால், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பிறகு, அதே கயிற்றினால் உடலையும் கட்டி பெரும்பாக்கம் ஏரியில் வீசியுள்ளனர். எப்படியும் இந்த கொலை நடந்து 2 நாட்களாவது இருக்கும் என்கிறார்கள் போலீசார்.
அவரது மூக்குத்தி, டிரஸ் ஆகியவற்றை வைத்து, கொலையான பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். பெரும்பாக்கம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைய உள்ளதால், அநேகமாக அந்த பெண் இங்கு பணியாற்றியவராக கூட இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதேபோல, அந்த பகுதியில் யாரேனும் இளம்பெண் காணாமல் போயுள்ளனரா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தனிப்படையுடன் இறங்கி உள்ளனர். பெரும்பாக்கம் ஏரியில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மிதந்த சம்பவம் சென்னை மக்களை உறைய வைத்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications