கங்கனா கன்னத்தில் பளார்.. பெண் காவலர் கையில் இனி பெரியார்.. தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவிப்பு..!
சென்னை: விவசாயிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகையும் தற்போதைய தேர்தலில் வென்று எம்பி ஆன கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்கவும் இருக்கிறார்.

இந்த தேர்தலில் முதன்முறையாக நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதை அடுத்து சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா ரனாவத் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
கங்கனா ரனாவத் : இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டி தொகுதியின் எம்பியும் நடிகையுமான கங்கனா சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தார்.
பெண் காவலர்: பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு நிலையத்திற்குள் செல்ல முயன்ற நடிகை கங்கனா ரனாவத்துக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரியான குல்விந்தர் கவுருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது அந்த அதிகாரி கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதில் கங்கனா ரனாவத்துக்கு கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கன்னத்தில் அடி: அப்போது நடிகை கங்கனா விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. தனது தாயும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் தனது தாயை தீவிரவாதி என சித்தரித்த கங்கனா ரனாவத்தை தான் அடித்ததாக அந்த பெண் காவலர் கூறி இருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் கங்கனாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்த நிலையில் , பெண் அதிகாரியை சக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
ஆதரவு: இது தொடர்பான விசாரணையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பெண் காவலருக்கு நாடு முழுவதும் ஆதரவு கிளம்பி வருகிறது. பல விவசாய சங்கங்களும் அமைப்புகளும் பெண் காவலருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பரிசு தொகையுடன் வேலையும் வழங்க தயாராக இருப்பதாக பலர் அறிவித்து வருகின்றனர்.

தபெதிக: இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜ எம்பி கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார்.
தங்க மோதிரம்: அவரது தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார். விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனையாக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை குல்விந்தர் கௌரை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம்." என கூறியுள்ளார்.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications