தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே..எந்த ரூட் தெரியுமா?
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட மக்கள் திட்டமிட்டுள்ளதால், ரயில், பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இதனால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னை, பெங்களூர் போன்ற உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதனால், ரயில்கள், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்காக தமிழக அரசு நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. வழக்கமாக ஓடும் பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

ரயில்களிலும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் காலியானது. இதனால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அரசு பஸ், தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. இதனால், ரயில்களில் பயணிக்கவே பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த வகையில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தென்னக ரயில்வே சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்று முன் தினம் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில் இருமார்க்கமாகவும் தலா 3 நாட்கள் இயங்க உள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06052) என்பது வரும் 9, 16, 23 ஆகிய நாட்களில் (வியாழக்கிழமைகளில்) இயங்க உள்ளது. இந்த ரயில் 3 நாட்களும் மாலை 3 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். அதன்பிறகு 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தீபாவளியை முன்னிட்டு நாகர்கோவில் - பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 7, 14, 21 ம் தேதிகளில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30க்கு பெங்களூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து நவம்பர் 8, 15, 22ம் தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10க்கு நாகர்கோவிலை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications