திருநங்கையுடன் காதல்.. சக வீரருடன் "நெருக்கம்".. டிரெண்டாகும் எம்பாபேவின் காதல் உறவு.. உண்மை என்ன?
சென்னை: பிரான்ஸ் வீரர் எம்பாபேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் திடீரென எழுந்துள்ளன.
2024 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் சூட் அவுட் வரை சென்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க.. 30 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் கொடுத்து.. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.
பெனால்டியில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட, பிரான்ஸ் 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் அர்ஜெடினா அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. நேற்று பிரான்ஸ் வீரர் எம்பாபே தனி ஆளாக 4 கோல் போட்டும் அந்த அணியால் அர்ஜென்டினாவை வீழ்த்த முடியவில்லை.

விவாதம்
இந்த போட்டியில் பிரான்ஸ் தோல்வி அடைந்து இருந்தாலும் அந்நாட்டு இளம் வீரர் எம்பாபே உலக அளவில் கவனிக்கப்பட்டு உள்ளார். 4 கோல் போட்ட அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாபேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் திடீரென எழுந்துள்ளன. இவர் திருநங்கை ஒருவருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி, நெட்டிசன்கள் அதை வைத்து விவாதங்களை செய்து வருகின்றன.

காதல்
முதலில் 23 வயதான எம்பாபே முதலில் ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது. பிரான்சில் பிரபலமாகி இருக்கும் அந்த நடிகையும் இவரும் அடிக்கடி டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியாகி இருந்தன. அப்போதே இதை வைத்து மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடந்தன. ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன்பின் இவர்கள் டேட்டிங் செய்வதும் அப்படியே நின்று போனது. இவர்கள் ஒன்றாக பொது இடங்களில் தோன்றுவது குறைந்து போனது.

திருநங்கை
இதையயடுத்துதான் அவர் திருநங்கை ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. அவரின் பெயர் ஐனெஸ் ராவு. 2017ல் இவர் உலகம் முழுக்க பிரபலம் ஆனார். பிரபல ப்ளே பாய் நாளிதழின் கவரில் இடம்பிடிப்பது என்பது மிக மிக கடினம். இந்த நிலையில் அந்த கவர் பேஜில் இடம்பிடித்த முதல் திருநங்கை இவர் என்ற புகழை உலகம் முழுக்க பெற்றார். அதன்பின் ஐனெஸ் - எம்பாபே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகின. ஐனெஸ் பிகினியில் இவருடன் நெருக்கமாக கடலில் இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.

வயது
ஐனெஸ்க்கு 32 வயது என்பதும் இந்த விவாதங்களுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இவர்கள் காதலில் இருக்கிறார்களா என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த செமி பைனலுக்கு பின் இவர் தன் பாலின உறவாளர் என்றும் விவாதங்கள் எழுந்தன. மொராக்கோ அன்னிக்கி எதிரான செமி பைனல் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. போட்டிக்கு பின் மொரோக்கா வீரர் அசார்ப் ஹாகிமியை கட்டிப்பிடித்து எம்பாபே பேசிக்கொண்டு இருந்தார். இவர்கள் நெருக்கமாக கட்டிபிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். இதை வைத்தும்.. இவர்கள் இருவரும் காதலில் இருக்கிறார்களா என்ற வாதம் வைக்கப்பட்டது. அவர் சினிமா நடிகையை காதலித்தாலும், திருநங்கையை காதலித்தாலும், இல்லை தன் பாலின உறவு கொண்டாலும் அது அவரின் தனிப்பட்ட விருப்பம் முடிவு. இதில் ரசிகர்கள், விமர்சகர்கள் சொல்ல ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!












Click it and Unblock the Notifications