கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க! 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு!
சென்னை: 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
நடைபெற்று முடிந்த பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி முதல் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கடந்த 19 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications