Final Voters List: இறுதி வாக்காளர் பட்டியல்.. உங்கள் பெயர் இருக்கிறதா என சரிபார்ப்பது எப்படி?
சென்னை: இன்று வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்தது. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23) வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அளவிலான ஒட்டுமொத்த இறுதி பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பிற்பகலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். கடந்த அக்டோபர் நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 5.43 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
மேலும் இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண் ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. சுமார் 23 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எப்படி உங்கள் பெயர் உள்ளதா என பார்ப்பது?
இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளதா என்பதை voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI Net, Voter Helpline App செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. voters.cci.gov.in அல்லது electoralsearch.cci.gov.in செல்லவும்.
2. உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.
3. பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.
4. இதில் உங்கள் பெயர் இருந்தால், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications