கசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்!
உருமறைப்பு நாயின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: படுக்கையில் மறைந்திருக்கும் நாயை கண்டுப்பிடிக்க சொல்லும் புகைப்படப் புதிர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. உங்களுக்கும் புதிர்களைக் கண்டுபிடிப்பது பிடிக்குமென்றால், இந்த செய்தியை படிப்பதற்கு முன்பு நீங்களும் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள நாயைக் கண்டுபிடிக்க முடிகிறதா என முயற்சித்துப் பாருங்கள்...
சமூகவலைதளங்களில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் பெரும்பாலும் அனைவராலும் அதிக அளவில் கொண்டாடப்படுகின்றன. அதிலும் இப்போது ஊரடங்கால் பலரும் இணையத்திலேயே மூழ்கிக் கிடக்க, இப்படியான புதிர்களை அதிகம் பார்க்க முடிகிறது.
தற்போதும் அப்படி ஒரு விலங்கு புதிர் புகைப்படம் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சேட்டைக்கார நாய்
சம்மந்தப்பட்ட அந்த புதிர் புகைப்படம் ஒரு உருமறைப்பு நாயின் புகைப்படமாகும். உருமறைப்பு என்றால் 'உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப்படும் அமைப்பு' என்பது பொருளாகும். அந்த புகைப்படத்தில் ஒரு படுக்கையறை உள்ளது. அதில் ஒரு நாய் மறைந்திருக்கிறது.

நீங்க எப்படி?
கசங்கிக் கிடக்கும் படுக்கை விரிப்பில் அந்த நாயை மிக சீக்கிரம் கண்டுபிடிப்பவர்கள் திறமைசாலிகள் என்கிறது அந்த புதிர். புகைப்படம் எடுத்த அந்த நாயின் உரிமையாளருக்கே அதை கண்டுபிடிக்க 10 நிமிடங்கள் ஆகிவிட்டதாம்.

சந்தேகம்
எவ்வளவு தான் உற்று உற்று பார்த்தாலும் புகைப்படத்தில் இருக்கும் அந்த நாயை கண்டுபிடிக்க முடியாமல் நெட்டிசன்கள் திணறி வருகின்றனர். அதில் உண்மையில் ஒரு நாய் இருக்கிறதா எனும் சந்தேகம் கூட பலருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கொஞ்சம் கஷ்டம் தான்
கடைசியில் அந்த நாய் கட்டிலில் போர்வைக்கு அடியில் மறைந்திருப்பதை சிலர் சரியாக கண்டுபிடித்துள்ளனர். உடல் முழுவதும் போர்வைக்கு உள்ளே இருக்க, நாயின் முகம் மட்டும் லேசாக வெளியே தெரிகிறது. உண்மையில் அந்த நாயை கண்டுப்பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை தான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications