கொடிகம்ப பைப் அகற்றிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. சாதிய ரீதியாக திட்டிய பாஜக மாஜி நிர்வாகி - வழக்கு
சென்னை: சென்னையில் பாஜக கொடிக்கம்பத்துக்காக வைத்திருந்த குழாயை அகற்றியதாக தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை சாதிய ரீதியாக திட்டிய முன்னாள் பாஜக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை பனையூர் வீட்டின் அருகே 55 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்க அந்த கட்சியினர் முயன்றனர். ஆனால் முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஜேசிபியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி முதல் 100 நாட்கள் ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் அமைக்கப்படும் என அண்ணாமலை அறிவித்தார். கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணிகளை பாஜகவினர் அனைத்து இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் சில இடங்களில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் பாஜக கொடிக்கம்பம் நடுவதற்கு வைக்கப்பட்டு இருந்த குழாயை அகற்றியதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை பாஜக முன்னாள் நிர்வாகி சாதிய ரீதியாக திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை கேகேநகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயராமன் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஆவார்.

இந்நிலையில் ராமலிங்கம் புதிதாக பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வகையில் குழாய்களை தயார் நிலையில் வைத்துள்ளார். இதனை ஜெயராமன் அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ராமலிங்கம் சாதிய ரீதியாக ஜெயராமனை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கேகே நகர் போலீசில் ஜெயராமன் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ராமலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications