மதுரை ஆதீனம் மீது வழக்கு.. கலவரத்தை தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் பாய்ந்தது..
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பேசும்பொருளானது. மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு மதுரை ஆதீனத்தின் குற்றச்சாட்டை பொய் என்று கூறிய நிலையில் தற்போது அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் முக்கியமான ஒன்று மதுரை ஆதீனம். மதுரை ஆதீனமாக இருப்பவர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார். இந்நிலையில் தான் மதுரை ஆதீனம் சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அதாவது கடந்த மே 3ம் தேதி சென்னையில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக மதுரை ஆதீனம் மற்றும் கார் டிரைவர் உள்பட அனைவரும் காயமின்றி தப்பினர். அதன்பிறகு மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கார் விபத்து மூலம் கொல்ல சதி நடந்ததாக தெரிவித்தார். அதேபோல் ஆதீனத்தின் கார் ஓட்டுநரும் கூட, நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியது. முதற்கட்டமாக சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்பிறகு மதுரை ஆதீனம் பயணித்த காரும், இன்னொரு காரும் லேசான விபத்தில் சிக்கியதும், கொலை முயற்சி எதுவும் நடக்காததையும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தான் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் சென்னை மாநகர ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பினார்.
அதில், மதுரை ஆதீனம் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் இரு மதத்தவர்கள் இடையே வெறுப்புணர்வு, பகை உணர்வை தூண்டுகிறார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். மதநல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும். இதனால் மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் இன்று மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத் போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications