ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. வெளியானது முதல் தகவல் அறிக்கை.. பகீர்
சென்னை: ஆளுநர் மாளிகை பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. இந்த வழக்கை கிண்டி போலீஸார் விசாரணை செய்து வருகிறார்ரகள்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் அருகே நேற்று பகல் ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது அவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து விசாரணையில் அவர் கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை எதிர்த்து தான் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் சிறையில் நீண்டகாலமாக இருந்து வருவோரை விடுதலை செய்ய ஆளுநர் மறுப்பதாகவும் அதனால் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கருக்கா வினோத் ஏற்கெனவே பிப்ரவரி மாதம் தமிழக பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டை வீசியவர். இவர் சரித்திர குற்றவாளி என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதாவது இவரது பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளது. இவர் ஏற்கெனவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் தேனாம்பேட்டை டாஸ்மாக் கடை மீதும் குண்டு வெடி வீசிய வழக்குகள் உள்ளன என விசாரணையில் தெரியவந்தது.
இவர் பிப்ரவரி மாதம் பாஜக அலுவலகத்தின் மீது குண்டு வீசியதை அடுத்து கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு மையமாக இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் உளவுத் துறை தனது பணிகளை சரியாக செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை அடுத்த கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் மோகன் என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்பவனின் பிரதான நுழைவாயிலை நோக்கி வினோத் வீசிய வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து வினோத்தை பிடிக்க முயன்ற போது காவலர்கள் மீதும் இரண்டாவது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதையும் மீறி வினோத்தை சுற்றி வளைத்த போது காவலர்களை அவர் மிரட்டினார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 124 சட்டப்பிரிவை கூடுதலாக சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications