கோவில் பெயரில் தனிநபர் இணையதளம் நடத்துவது குற்றம்.. வழக்குப்பதிய மதுரை உயர்நீதிமன்றம் பரபர உத்தரவு
மதுரை: மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது. கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம். இத்தகைய இணையதளத்தை உடனே இந்து அறநிலையத்துறை முடக்குவதோடு, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை அபகரிப்பதும், கோவில் பெயரில் சிலர் மோசடி நடவடிக்கைகளை அரங்கேற்றி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கு மயிலாடுத்துறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் இந்த கோவில் பெயரில் சிலர் போலி இணையதளம் தொடங்கி பல்வேறு வழிகளில் பணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் பெயரில் போலி இணையதளம் துவங்கி சிறப்பு பூஜை, சடங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறி பக்தர்களை ஏமாற்றி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் கோவில் தனியார் இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் என்பன போன்ற விபரங்களை கூறியிருந்தார்.
இந்த பொதுநல மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‛‛மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் யாரும் பயன்படுத்த கூடாது. கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளம் நடத்துவது குற்றமாகும். தனிநபர்கள் நடத்தும் இணையதளத்தை உடனே அறநிலையத்துறை முடக்க வேண்டும். கோவில் பெயரில் போலி இணையதளம் நடத்தினால் உடனே வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் இணை ஆணையர் இணையதளத்தை முடக்கி நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் வழக்கை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications