குபு குபுன்னு எரிந்த தீ.. சென்னையின் முக்கிய ஏரியாவாச்சே! மொத்தமாக கருகிய 2 மாடி ஜவுளிக்கடை
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஒன்றில் அதிகாலை மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தொடக்கத்தில் கடையில் இருந்து புகை வெளியேறிய நிலையில், படிப்படியாக தீ பரவத் தொடங்கியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்த 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் தீயணை கட்டுப்படுத்தும் பணி கடினமாக இருந்து வருகிறது. கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. தண்ணீர் காலியாகியும் தீ அணைக்கப்பட்டதால் தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வர வழைக்கப்பட்டு அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2 மாடிகளை கொண்ட இந்த ஜவுளிக் கடையில் பரவிய தீயை அணைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் கடையின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டது. 2 மாடிகளிலும் தீ பற்றி எரிந்ததால் கடையில் இருந்த ஆடைகள், இதர பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications