சென்னை பாரிமுனையிலுள்ள ஓட்டல் சரவண பவனில் தீ விபத்து.. தீயை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரம்
சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள பிராட்வே பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமான சரவணபவனில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சரவணபவன் உணவகத்தில் எரியும் தீயை அணைத்து கட்டுப்படுத்தும் முயற்சியில், எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1981-ம் ஆண்டு ஓட்டல் சரவண பவன் துவங்கப்பட்டது. தென்னிந்திய சைவ உணவு வகைகளை தனிச்சுவையுடன் வழங்கும் ஓர் தொடர் உணவக நிறுவனமாக தற்போது திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளன.
அமெரிக்கா, கனடா,லண்டன், பாரிஸ், சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு என உலகெங்கும் வெளிநாட்டு விற்பனை உரிமை கிளைகளையும் சரவணபவன் கொண்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிமுனை என்றழைக்கப்படும் சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள ஓட்டல் சரவணபவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டடுள்ளனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதுவரை காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications