சிபிசிஎல் ஆலையில் பயங்கர தீ விபத்து.. எண்ணெய் கழிவு கடலில் கலந்த அதிர்ச்சிக்கு இடையே ஷாக் சம்பவம்!
சென்னை: சென்னையை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் ஆலை இயங்கி வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 'மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள், கொசஸ்தலை ஆற்றிலும் அதன் வழியாக எண்ணூர் பகுதியில் கடலிலும் கலந்தன.

எண்னூர் பகுதியில் வெள்ள நீரோடு கலந்து ஏராளமானோரின் வீடுகளிலும் எண்ணெய் கழிவுகள் புகுந்தன. கடலில் கடந்த எண்ணெய் கழிவால், மீன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பல சதுர கி.மீ பரப்பளவுக்கு எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளதால், இன்னும் இந்தப் பணி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 10 மணி அளவில் ஏற்பட்ட தீ, பரவி, எங்கும் கரும் புகை மூட்டமாக இருந்து வருகிறது. தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் வழியாக கச்சா எண்ணெய் கடலில் கலந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications