ஸ்லீப்பர் வந்தே பாரத்.. சென்னை ஐசிஎப்-பில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் "டெஸ்ட்".. ரயில் பயணிகள் குஷி
சென்னை: ரயில் பயணிகளால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளது.. இதையடுத்து சென்னை ஐசிஎப்பில் இதற்கான பணிகள் கூடியிருக்கின்றன. முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் குறித்து அதிகாரிகள் நம்பிக்கை தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.
உலக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, நம்முடைய சென்னையின் ஐசிஎஃப் திகழ்கிறது. இங்கு இதுவரை 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாராகி வெளிவந்திருக்கின்றன...

வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் இஐஎப்பில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.
தயாரிப்புகள்: எனினும், 3515 ரயில் பெட்டிகளை தயாரித்து முடிக்க இந்த வருடம் டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் 658 வந்தே பாரத் ரயில் பெட்டிகளும், 1536 எல்எச்பி பெட்டிகளும் அடக்கமாகும்.
வந்தே பாரத் தவிர, சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், வந்தே மெட்ரோ ரயில்கள், அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் என பல்வேறு ரயில்களின் போன்றவைகளும் ஐசிஎப்பில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, ஸ்லீப்பர் வந்தே பாரத் ஆகும்.
வந்தே பாரத்: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎப்பில்தான் தயாராகிறது. 50 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், 50 வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான பணி ஆணை கடந்த ஜூலையில் வழங்கப்பட்டிருந்தது...
பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த வருடம் துவங்கப்பட்டது. இந்த பணிகள் நடந்து முடிந்த நிலையில், இந்த ரயிலில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
படுக்கை வசதியுள்ள, இந்த வந்தே பாரத் ரயிலை, சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வந்து, விரைவில் பல கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
ஐசிஎப்: இந்நிலையில், தயாரிப்பு பணி முடிந்துள்ள நிலையில், முதல், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், பெங்களூரில் இருந்து நேற்று சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு வந்திருக்கிறது.. அங்கு இனிமேல் பல கட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
"ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், பயணிகளை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில், சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. ரயில்வே வாரிய அதிகாரிகள், ஐசிஎப் தொழில்நுட்ப அதிகாரிகள் பார்வையிட்டனர். இதையடுத்து, இங்குள்ள ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்பிறகு, மணிக்கு 180 கி.மீ., வரை வேகமாக இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
ஒப்புதல்: இந்த ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன், பயணியர் வசதிகள் குறித்து அறிக்கை, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டு, உரிய ஒப்புதல் பெறப்படும். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து, ரயில்வே வாரியம் இறுதி செய்து அறிவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications