Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமியின் மீது விழும் நிழல்.. ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! இந்தியாவில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் வரும் 29ம் தேதி தெரிய இருக்கிறது. ஆனால் இது முழு சூரிய கிரகணமாக அல்லாமல், பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனை இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? எவ்வளவு நேரம் தெரியும்? எங்கு எப்படி பார்ப்பது? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த செய்தி விடையளிக்கிறது.

solar eclipse US interanional

சூரியன்-நிலவு-பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் சூரியனை நிலவு மறைத்து விடுகிறது. சூரியனை விட நிலவு 15 மடங்கு சிறியதுதான். ஆனால், நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே 15 மடங்கு தொலைவு இருப்பதால் இரண்டும் ஒரே சைஸ் போல தெரியும். எனவே, நிலவு சூரினை மறைக்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கும். இப்படி நடக்கும்போது திடீரென சூரியனின் வெளிச்சம் குறையும். மார்ச் 29ம் தேதி இந்த நிகழ்வுதான் நடக்கப்போகிறது.

ஆனால், இந்த முறை முழு சூரிய கிரகணம் நடக்காது. அதாவது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்துவிடாது. மாறாக சிறியதாக, பாதியளவுக்கு மட்டுமே மறைக்கும். இதனை பகுதி சூரிய கிரகணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சுமார் 80 கோடி மக்கள் இதனை பார்க்க முடியும். ஆனால் இந்தியாவில் இது தெரியாது.

வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகள், மற்றும் ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் தெரியும். சிம்பிளாக சொல்வதெனில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்தான் இது தெரியும். கிரகணம் உச்சியை அடையும்போது இந்தியாவில் சூரியன் ஏறத்தாழ மறைந்திருக்கும்.

ஒருவேளை நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் சிறப்பாக இதை பார்க்கலாம். அதாவது,

நியூயார்க் (New York): 6:35 AM-7:12 AM
மாச்சூசெட்ஸ் (Massachusetts): 6:27 AM-7:08 AM
மேன் (Maine): 6:13 AM-7:17 AM
பென்சில்வேனியா (Pennsylvania): 6:46 AM-7:08 AM
நியூஜெர்சி (New Jersey): 6:43 AM -7:06 AM
விர்ஜீனியா (Virginia): 6:50 AM-7:03 AM

இந்த நேரங்களில் உங்களால் கிரகணத்தை பார்க்க முடியும். கனெட்டிகட், மரிலாந்து, ரோட் ஐலாந்து, நியூ ஹாம்ஷையர், வெர்மாண்ட், மேற்கு விர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கிரகணத்தை பார்க்க முடியும்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது. ISO 12312-2 தரச்சான்று பெற்ற கிரகணம் பார்ப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளையும், சோலார் வடிக்கட்டி கொண்ட கண்ணாடிகளையும், பின்ஹோல் புரொஜெக்டர் ஆகியவற்றையும் பயன்படுத்தி கிரகணத்தை பார்க்கலாம். சாதாரண கூலிங் கிளாஸ் (Sunglasses) பயன்படுத்துவதும் ஆபத்தானதுதான்.

நேரடியாக பார்க்காமல் தண்ணீரில் எதிரொலிக்கும் சூரியனை பார்க்கலாம் என பலருக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் பாதுகாப்பான வழிமுறை கிடையாது. குறிப்பாக சிறுவர்கள், முதியோர்களுக்கு இது கண் பார்வை பாதிப்பை ஏற்படுத்தும். நீர் அதிக அளவில் UV கதிர்களை தடுக்காது எனவே இது பாதுகாப்பான வழிமுறை கிடையாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+