Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதன்முறையாக சென்னையில் அசத்தல்.. ஒரே இடத்தில் 150 ஓட்டலா? "ஸ்டால்" எங்கே வருதுன்னு பாருங்க? சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைய போகிறதாம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, உணவுப்பிரியர்களும், நடைபாதை வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எங்கு தெரியுமா?

சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கிறது.. தென் இந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், சைனீஸ் உணவுகள் என்று அனைத்து வகையான உணவுகளும் சென்னையில் கிடைக்கிறது என்றாலும், இந்த உணவுகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கிறது.

Chennai North Chennai

ஃபுட் ஸ்ட்ரீட்: அதனால்தான் கடந்த வருடம், சென்னையில் 'ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.. சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்து, ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச்சாலைகளை அமைக்கும் பணியும் துரிதமானது.

சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக ஃபுட் ஸ்ட்ரீட் (Food Street) அமைவது, உணவுப்பிரியர்களுக்கு இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வரும்நிலையில், இன்னொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.

ஆக்கிரமிப்புகள்: அதாவது, வடசென்னையில் முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைக்கப்பட உள்ளதாம்... சென்னையில் சாலையோரத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன... இந்த கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியும், இந்த சாலையோர கடைகளை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. எனவே, உணவு விற்பனை மண்டலத்தை தனியாக ஏற்படுத்தி, அதில் சாலையோர கடைகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உணவு விற்பனை: இதன் ஒருபகுதியாக, வடசென்னையில் முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமைய உள்ளதாகவும், இதற்காக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில் அமைந்துள்ள, கேப்டன் காட்டன் கால்வாய் அருகே உள்ள இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. உணவு விற்பனை மண்டலம் அமைக்க, இந்த சாலை மிகவும் பொருத்தமானதாக இருப்பதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

அதனால்தான, சமீபத்தில் அதிகாரிகள், நேரடியாகவே இங்கு வந்து பார்வையிட்டு, இது தொடர்பான அறிக்கையும் மாநகராட்சியில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.. ஆனால், இன்னும் ஒப்புதல் வரவில்லை.. இந்த ஒப்புதல் கிடைத்ததுமே, விரைவில் அங்கு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

வடசென்னை: இந்த இடம் சுமார் 270 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டதாக இருப்பதால், 150 உணவு கடைகள், பூ விற்பனை, பொருட்கள் விற்பனை கடைகள் தாராளமாக அமைக்க முடியும் என்கிறார்கள். அந்தவகையில், முதன் முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முதல் மாதிரி உணவு விற்பனை மண்டலம் அமையபோவது, வடசென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை இப்போதே தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+