மதுரவாயல் பைபாஸ்ல ஆச்சரியம்.. தமிழகத்திலேயே முதல்முறையாக ரயில்வேயையே மிஞ்சி அசத்தல்..யார்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் "புஷ் துரோ" முறையில் 56 மீட்டர் கல்வெட்டை பதித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்.
பருவமழை பெய்தாலே, போரூர் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது, அய்யப்பன் தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளில் நுழைந்து, அங்கு தண்ணீர் தேங்கிவிடுவது வழக்கம்.
மழைக்காலம்: அதனால், மழை காலங்களில் இந்த பகுதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மழை நீர் கால்வாய் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.100 கோடி செலவில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து முடிந்தது.

அதேபோல, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை கடந்து மழை நீர் செல்ல வழி இல்லாததால், தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் இடர் எதுவும் ஏற்படாமல், புஷ் துரோ முறையில் தாம்பரம் - மதுரவாயல் பைபாசின் கீழ் 54 மீட்டருக்கு கல்வெர்ட்டு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று முடிந்தது.
இப்போது, அதே பகுதியில் மறுபடியும் 56 மீட்டர் தூரத்துக்கு கல்வெர்ட் கால்வாயை புஷ் அண்ட் துரோ என்ற நவீன முறையில் அமைக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று முடிந்துள்ளது.
கல்வெட்டு: இதன் சிறப்பு என்னவென்றால், பிரதான சாலையை உடைக்காமல் கல்வெர்ட்டு உள்ளே தரைக்கு கீழ் நுழைக்கப்படும்... ஒரு கல்வெர்ட்டு 11 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 1.4 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த கல்வெர்ட்டின் மீது கனமான இரும்பு அமைக்கப்பட்டு கம்பரசர் மூலமாக அழுத்தம் கொடுத்து புஷ் துரோ முறையில் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்படும். நாள் ஒன்றுக்கு 2 மீட்டர் மட்டுமே இதனை செலுத்த முடியும்.

இப்போது, வரை 56 மீட்டரில் சாலையின் நடுவே 44 மீட்டரும், சாலைக்கு வலது புறமும், இடது புறமும் தலா 6 மீட்டர் விட்டு புஷ் அண்ட் துரோ கல்வெர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் சாலை விரிவாக்க பணி நடந்தால் இந்த பகுதியில் கல்வெர்ட்டின் மீது சாலை அமைத்து கொள்ளலாம். இதற்காக இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்த பணிகளை விரைந்து முடித்து, தார்சாலைகள் அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், ரயில்வே துறையில் மட்டுமே சாத்தியமான பணியை, நெடுஞ்சாலைத்துறையும் தற்போது அசத்திவிட்டது.
சபாஷ் பணிகள்: வாகன போக்குவரத்து மிகுந்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமலும், போக்குவரத்தை தடைசெய்யாமலும், 2 புஷ் அண்ட் துரோ கல்வெட்டை அமைத்துள்ளதே அந்த சாதனையாகும். இந்த பணிகளை நேற்று நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டதுடன், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் வெற்றிகரமாக இந்த பணி அமைக்கப்பட்டது குறித்து பாராட்டும் தெரிவித்தார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications