லீவ் கேட்டு பாஸுக்கு மேசேஜ்.. அடுத்த 10 நிமிடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நபர்.. நெஞ்சு பதறுதே!
சென்னை: வாழ்க்கை எப்போதுமே கணிக்க முடியாத ஒன்று.. அடுத்த நொடி யாருக்கு என்ன நடக்கும் என்பதை நம்மால் சொல்லவே முடியாது. நம்முடன் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் அடுத்த நாள் இருக்க மாட்டார். இதுபோல பல விஷயங்கள் நடந்துள்ளன. அப்படியொரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
வாழ்க்கை என்பது பல விசித்திரங்கள் நிறைந்தவை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நம்மைச் சுற்றியே கூட பலருக்கும் இதுபோல விபரீதங்கள் நடப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் மேனேஜர் ஒருவர் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

10 நிமிடத்தில் உயிரிழப்பு
அதாவது 40 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர், உடம்பு சரியில்லை என்று தனது மேனேஜருக்கு லீவ் கேட்டு வாட்ஸ்அப் மெசேஜ் செய்திருக்கிறார். ஆனால், இதுபோல மெசேஜ் அனுப்பி 10 நிமிடங்களில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்த தகவல்களை அவரது மேனேஜர் கே.வி. ஐயர் என்பவர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கே.வி ஐயர், "எனது சக ஊழியரான ஷங்கர், காலை 8:37 மணிக்கு எனக்கு மெசேஜ் அனுப்பினார். சார், கடுமையான முதுகுவலி காரணமாக இன்று என்னால் அலுவலகம் வர முடியாது. எனக்கு லீவ் தேவை எனச் சொல்லி லீவ் கேட்டிருந்தார். வழக்கமாகக் காலை நேரங்களில் இதுபோன்ற மெசேஜ்கள் வருவது சாதாரணம் தான் என்பதால் நானும் 'சரி, ரெஸ்ட் எடுங்கள்' என்று ரிப்ளை செய்தேன். அன்றைய தினம் வழக்கம் போல அன்றைய நாள் போனது.
நம்ப முடியவில்லை
இந்தச் சூழலில் தான் காலை 11 மணிக்கு எனக்கு இன்னொரு கால் வந்தது.. அது என்னை முழுமையாக உலுக்கியது. எனக்கு போன் செய்த அந்த நபர் ஷங்கர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. எனவே, இன்னொரு சக ஊழியரைத் தொடர்புகொண்டு உறுதி செய்ய முயன்றேன். சங்கர் வீட்டிற்கும் சென்றேன். நான் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் உயிரோடு இல்லை.
ஷங்கர் ஆறு வருடங்களாக எனது டீமில் இருந்தார். அவருக்கு வயது 40. அவர் ஆரோக்கியமானவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருந்தார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவருக்குப் புகைபிடிக்கும் அல்லது நமது குடிக்கும் பழக்கம் எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது ஷங்கர் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.
10 நிமிடங்கள்
இது தொடர்பாக கே.வி. ஐயர் மேலும் கூறுகையில், "ஷங்கர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்... நம்பமுடியாத விஷயம் என்னவென்றால், அவர் காலை 8:37 மணிக்கு விடுப்பு கேட்டு மெசேஜ் அனுப்பினார்.. பிறகு பத்தே நிமிடத்தில் அதாவது 8:47 மணிக்கு அவர் உயிரிழந்தார். ஒரு நபர், முழு உணர்வுடன், தனது கடைசி மூச்சுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இதை உணர்ந்த போது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
வாழ்க்கை கணிக்க முடியாதது
வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக இருங்கள்.. மகிழ்ச்சியாக வாழுங்கள்! ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது" என்று பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஐயரின் இந்த ட்வீட் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
ஷங்கரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வதாகப் பலரும் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் வாழ்க்கை எந்தளவுக்குக் கணிக்க முடியாதது என்பதற்கு இது சிறந்த உதாரணம் என சொல்லியுள்ளனர். இன்னும் சிலர் இதுபோல தங்களுக்கு நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications