தமிழகம்: திமுக கூட்டணியே வெல்லும்- பாஜகவுக்கு "இத்தனை" இடங்களா? 5 கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் என இதுவரை வெளியான 5 லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 6 தொகுதிகள் வரை வெல்லும்; 3 தொகுதிகளை உறுதியாக கைப்பற்றும் என்கின்றன இந்த கருத்து கணிப்புகள்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகியவை அங்கம் வகிக்கின்றன. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்டவை உள்ளன.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தொடர்ந்து கருத்து கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் மொத்தம் 5 கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பான 5 கருத்து கணிப்பு முடிவுகளிலுமே திமுக கூட்டணிதான் தமிழ்நாட்டில் வெல்லும்; அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளன. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்கும்; நிச்சயமாக 3 தொகுதிகளை பாஜக கைப்பற்றிவிடும் என்பதும் இந்த கருத்து கணிப்புகளின் ஆரூடம்.
லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளின் தொகுப்பு:
ABP CVoter கருத்து கணிப்பு
திமுகவும் கூட்டணி கட்சிகளும் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. திமுக கூட்டணிக்கு 54.7% வாக்குகளும் அதிமுக அணிக்கு 27.8%; பாஜக கூட்டணிக்கு 10.9% வாக்குகள் கிடைக்குமாம். இதர கட்சிகள் அனைத்துக்கும் 6.8% வாக்குகள் சாத்தியமாம்.
TV9- Polstrat கருத்து கணிப்பு
திமுக கூட்டணி மொத்தம் 36 இடங்களைக் கைப்பற்றுமாம். திமுக கூட்டணிக்கு 32% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பாஜக கூட்டணிக்கு மொத்தம் 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. பாஜக அணிக்கு 21% வாக்குகள் கிடைக்குமாம்.
அதிமுகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது. அதிமுகவுக்கு 15% வாக்குகள் கிடைக்குமாம்.
India tv கருத்து கணிப்பு
திமுக 18 இடங்களிலும்
காங்கிரஸ் 8 இடங்களிலும்
என மொத்தம் 26 இடங்களில் திமுக கூட்டணி வெல்லுமாம்.
அதிமுக 4 இடங்களைக் கைப்பற்றுமாம்
பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்குமாம்.
பாமக 1 இடமும் இதர கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
TIMES NOW- @ETG கருத்து கணிப்பு
திமுக 21 முதல் 22 இடங்களில் வெல்லும்.
காங்கிரஸ் கட்சி 5 முதல் 7இடங்களைக் கைப்பற்றும்
அதாவது திமுக கூட்டணிக்கு 26 முதல் 29 இடங்கள் கிடைக்குமாம்.
பாஜகவுக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.
அதிமுகவுக்கு 1 முதல் 3 இடங்கள் மட்டுமே கிடைக்குமாம்.
இதர கட்சிகளுக்கு 4 முதல் 5 இடங்கள் கிடைக்கலாமாம்.
Lok Poll கருத்து கணிப்பு:
திமுக கூட்டணிக்கு 34 முதல் 37 இடங்கள் கிடைக்கக் கூடுமாம்.
அதிமுக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்கள் கிடைக்குமாம்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 0 முதல் 1 இடம்; இதர கட்சிகளுக்கும் 0 முதல் 1 இடம் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications