இன்னும் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு மேல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளா அசாமில் கடந்த ஏப்.9 ஆம் தேதியும், தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Five-State Election Results Today Counting Under Tight Security

தமிழகத்தில் 85.10 சதவீதம், மேற்கு வங்கத்தில் 92.47 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம், கேரளாவில் 78.27 சதவீதம், அசாமில் 85.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் முறைகேடு புகார் எழுந்ததால் மகரஹட் பஸ்சிம், டைமண்ட் ஹார்பர் ஆகிய 2 தொகுதிகளின் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் கடந்த 2 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஃபால்டா தொகுதியில் மே 21 ஆம் தேதி மறு தேர்தல் நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக, அமைதியாக நடைபெற, 165 கூடுதல் வாக்கு எண்ணும் பார்வையாளர்கள், 77 காவல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 5 மாநிலங்களிலும் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

62 மையங்களிலும் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர், 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் என 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு க்யூஆர் கோடு வசதி மற்றும்புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

62 மையங்களில் மொத்தம் 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள், மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை எண்ண 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,135 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணிக்கு 3,324 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10,545 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.

பிரத்யேக க்யூஆர் கோடு உள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேறு யாரும் வாக்கு எண்ணிக்கை கூடத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீசார், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணி முடித்த பிறகே, இயந்திரங்களில் பதிவான இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் போலீசார் உட்பட தமிழகம் முழுவதும் கண்காணிப்பு, ரோந்துப் பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விடுமுறையில் இருந்த போலீசாரும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டால் கைது டிஜிபி எச்சரிக்கை: வாக்கு எண்ணிக்கையின்போது மோதலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

இவிஎம் வாக்குகள் எண்ணிக்கையின்படி முன்னிலை நிலவரம் காலை 10 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்து கொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+